விழுப்புரம் மின் கோட்டத்தில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைய இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடக்கும் என்று மின்வாரிய அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி குறிப்பாக, டிசம்பர் 31 வரை செலுத்தலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று மின்வாரியம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மின் வினியோக கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், நாளை (புதன் கிழமை) வரை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு ஆதார் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Must Rerad : இளையராஜாவுடன் இணைந்த தேனி கவிஞர்... வைரமுத்து அல்ல - இவர் யார் தெரியுமா?
மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள், ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் www.tangedco.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பை நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Local News, TNEB, Villupuram