ஹோம் /விழுப்புரம் /

பிறக்கும்போதே 2 கையும் இல்லை.. பெற்றோரும் கைவிட்டுட்டாங்க.. கைகள் இல்லாமல் பிறந்த விழுப்புரம் பெண்ணின் ஆசிரியை கனவு..

பிறக்கும்போதே 2 கையும் இல்லை.. பெற்றோரும் கைவிட்டுட்டாங்க.. கைகள் இல்லாமல் பிறந்த விழுப்புரம் பெண்ணின் ஆசிரியை கனவு..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமம் தான் வித்யாஸ்ரீயின் சொந்த ஊர். பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்த இப்பெண்ணை அவரின் பெற்றோரும் கைவிட்டுள்ளனர். தன்னம்பிக்கையால் மீண்டெழுந்த வலி நிறைந்த வாழ்க்கைபாதையை விவரிக்கிறார் வித்யா ஸ்ரீ..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட  ஆற்காடு  கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதாகும் வித்யாஸ்ரீ.  பிறக்கும்போதே இவருக்கு இரண்டு கைகளும் இல்லை என்றாலும் மனம் தளராமல் கால்களை கைகளாக கொண்டு சாதிக்க துடிக்கும் தன்னம்பிக்கை பெண்தான் வித்யாஸ்ரீ.

பெற்றோர்களே கைவிட்டும் இன்றளவும் பிறப்பிலிருந்து இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார் வித்யாஸ்ரீ.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமம் தான் வித்தியாஸ்ரீயின் சொந்த ஊர். அப்பா அண்ணாமலை வயது 65 விவசாயக் கூலியாக கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.  வித்யாஸ்ரீயுடன் பிறந்தவர்கள் அவரோடு சேர்த்து 5 பேர். வித்யஸ்ரீ தான் மூத்தவர். மூன்று தங்கைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடைசி தங்கைக்கும் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. 30 வயதாகும் வித்யாஸ்ரீ எம் ஏ ஆங்கிலம், பி எட் முடித்துள்ளார்.

பாட்டியுடன் வித்யாஸ்ரீ

வித்யாஸ்ரீ,  அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் சந்தித்த சிரமங்கள் குறித்து நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்தார்.. அவர் கூறியதாவது,

“நான் பிறந்த உடனே அம்மாவும் அப்பாவும் என்னை வெறுத்து விட்டார்கள்.  ஆமாம் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தால்...? அதனை யாரு தான் வெறுக்க மாட்டார்கள் . என்னை  பாட்டி வீரம்மாள், தாத்தா ராமரும் தூக்கிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூரில் கொண்டுவந்து வளர்த்தனர்.

மேலும் படிக்க: திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

தாத்தா ராமர் விவசாயக்கூலி. பாட்டி யாராவது கூப்பிட்டால் விவசாய வேலைக்கு போவார். இப்போது வரை பாட்டிக்கு என் மேலே ஒரு பெரிய நம்பிக்கை. எப்படியாவது நான் வாழ்ந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் என்னை வளர்க்க ஆரம்பித்தார்.

வித்யாஸ்ரீ

5 வயது இருக்கும் போது பாட்டி வீரம்மாள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்க போனார், இரண்டு கைகளும் இல்லை என்று தெரிந்தவுடன் பள்ளிக்கூடத்தில் என்னை சேர்ப்பதற்கு மறுத்துவிட்டார் தலைமை ஆசிரியர்.

என் பாட்டியும் அவரை விடாமல், “அரசுப் பள்ளிக்கூடம் எங்களுக்கானது எங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளையை சேர்க்காமல் இங்கு இருந்து போகவே மாட்டேன்” என்று உறுதியாக இருந்து என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு சென்றார்.

மேலும் படிக்க:  கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

தலைமை ஆசிரியை என்னை பார்த்து , எப்படி புத்தகத்தை படிப்பாய் எப்படி எழுத்துக்களை எழுதுவாய் என்று கேட்டார் அதற்கு கால்களை எனக்கு கைகளாக இருக்கும் நான் நிச்சயமாக படித்து சாதிப்பேன் என கூறினேன்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து எ8ம் வகுப்பு வரை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அதன் பிறகு, பத்தாம் வகுப்பு வரை எங்கள் சொந்த ஊரான ஆற்காடு அரசுப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 500க்கு 329 மதிப்பெண் எடுத்தேன். அடுத்து, 12ஆம் வகுப்பு திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் டேனிஷ் மிஷின் பள்ளியில் படித்து அப்போது 1200 மதிப்பெண்ணுக்கு 744 மதிப்பெண் எடுத்தேன். ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் போது எனக்கு எதுவும் தெரியவில்லை.

மேலும் படிக்க: தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

அதன் பிறகு, பள்ளிக்கூடம் செல்லும் போதும், கல்லூரிக்கு செல்லும் போது தான் கைகள் இல்லாதது மிகப்பெரிய கவலையாக எனக்கு இருந்தது. என்னோடு படித்த மாணவர்கள் எனக்கு உதவியாகவே இருந்தார்கள் என்று சொல்லலாம். ஒருவர் கூட என்னை ஏளனமாக பார்த்தது கிடையாது.

மற்ற மாணவர்களை விட எனக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி தருவார்கள் தனி அறையில் தான் தேர்வு எழுதுவேன்.படிப்பதாக இருந்தாலும் கூட புத்தகத்தை கால்களால் பிரித்து தான் படிப்பேன்.

நான் திருக்கோவிலூரில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ படிக்க சேர்ந்த போது அந்த கல்லூரி நிர்வாகம் என் நிலையைக் கண்டு எனக்கு கட்டணம் எதுவும் வாங்காமலே படிக்க வைத்தார்கள். அதன் பிறகு, எம்.எ படித்தேன், பின்னர், பிஎட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இப்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

ஒரு நாள் இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சென்று ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தேன். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வேலை கிடைப்பதற்கு முன் ஏதாவது ஒரு வேலை வேண்டும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் எனக்கு "வாழ்ந்து காட்டுவோம்" திட்டத்தில் "தொழிற்சார் சமூக வல்லுனர்" பணியை வழங்கினார். இது தற்காலிக பணிதான், ஆனால், என்னாலும் வேலை செய்ய முடியும் என நம்பி அந்தப் பணியை எனக்கு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மோகன்.

நான் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எனக்கு கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலைதான். கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்வது, அவர்களுக்கு என்ன தொழில் தெரியுமோ அதற்கான பயிற்சி வழங்குவதற்கு பரிந்துரை செய்வது, இதுதான் வேலை. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் முழுமனதோடு இப்போது வரை செய்து வருகிறேன் என்கிறார் வித்யாஸ்ரீ.

என்னுடைய லட்சியமே நான் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பதுதான். என்னைப்போன்ற நம்பிக்கையான மாணவர்களே இந்த கல்வி மூலம் உருவாக்க வேண்டும் அதுவே என்னுடைய முக்கிய நோக்கமாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தன்னை ஏராளமாக பார்த்த அனைவருக்கும் ஒரு நெத்தியடி கொடுத்தார் வித்யா ஸ்ரீ.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தமிழக முதலமைச்சர் ஏதேனும் ஒரு ஆசிரியர் பணியை எனக்கு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கையையும் விடுத்தார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram