ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் குறைதீர் மனு எழுதித்தர இனி கட்டணம் கிடையாது..!!

விழுப்புரத்தில் குறைதீர் மனு எழுதித்தர இனி கட்டணம் கிடையாது..!!

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளிக்கின்றனர். இம்மனுக்களை ஆட்சியர் மோகன் நேரடியாக பெறுகிறார். பொதுமக்களுக்கு மனு குறித்த நிலையும் தெரிவிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில்,13 தாலுகாக்கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும், மகளிர் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் செயல்பட்டு வரும் மகளிர் திட்ட உறுப்பினர்கள், ஒவ்வொரு வாரமும் மனுக்களை எழுத வருகிறார்கள். மனுக்களை எழுதும் ஊழியர்கள் பொது மக்களிடம் உள்ள கோரிக்கைகளையும் குறைகளையும் நன்கு கேட்டறிந்து அதன்பின் மனுக்களை எழுதி தருகிறார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே சிலர், இம்மனுக்களை எழுதி கொடுக்க, குறைந்தபட்சம் ரூ.100 முதல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெறுகின்றனர். பொதுமக்களும், மனு எழுதும் நபர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து மனுக்களை பெற்று செல்கின்றனர்.

மேலும் படிக்க:  திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

இந்நிலையில் பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த எழுத படிக்க தெரிந்த பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில் இன்று திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொது மக்களிடம் கேட்டபோது, பொது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வருகிறோம். ஒரு சிலர் மனுக்களை எழுதி தருவதற்கு 100 ரூபாய் 150 ரூபாய் 50 ரூபாய் என பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இலவசமாக மனுக்கள் எழுதி தருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதுமட்டுமல்லாமல் நாங்கள் கூறும், கருத்துக்களை அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் எழுதி தருகிறார்கள். மேலும், மனுக்களை எப்படி எழுத வேண்டும் என்பது குறித்த விளக்கங்களையும் கூறுகிறார்கள். இலவசமாக மனு எழுதித்தருவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram