முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

விழுப்புரத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

X
ஆட்சியரிடம்

ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

Viluppuram petition | விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் பொய்கையரசூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் பொய்கையரசூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் வாழ்க்கை என்பது மிகவும் துயரமானதாகவும் இருக்கக் கூடியது. சுமார் மூன்று சென்ட் மனையில் 5 குடும்பங்கள் வசிக்கிறார்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் நான்கு நபர்கள் என்றால் கூட இருபது நபர்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.

கழிப்பிட வசதி போன்ற எந்த ஒரு வசதியும் இங்கு இல்லை. மேலும் சாலை வசதி இல்லாத காரணத்தால் 150 மீட்டர் நீளமுள்ள சந்து வழியாக இறந்த உடலை கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

இறந்தவர் உடலை மற்றவர்கள் மற்றவர்கள் செல்லும் வழியில் கொண்டு செல்வதால் சில தகராறுகள் ஏற்பட்டு வருகிறது.

50 ஆண்டுகளாக நாங்கள் அனுசரித்து வாழ்ந்து விட்டோம் ஆனால் வருங்கால சந்ததிகள் வாழ வழி வகை செய்ய வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு போதிய கழிப்பிட வசதி சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என ஆதிதிராவிட மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

First published:

Tags: District collectors, Local News, Villupuram