முகப்பு /விழுப்புரம் /

காணாமல்போன நாயை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு - எவ்வளவு தெரியுமா?

காணாமல்போன நாயை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு - எவ்வளவு தெரியுமா?

X
மாதிரி

மாதிரி படம்

Dog Missing | கோலியனூர் அருகே 5 வருடமாக ஆசையாக வளர்த்த சோபியா என்ற நாயை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுமென போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பொதுமக்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள புருஷானூர் கிராமத்தில் ஊர்காவல் படையை சார்ந்த லட்சுமிநாராயணன் - விஜயா தம்பதியினரின் வீட்டில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக செல்லப்பிராணியான சோபியா என்று பெயரிடப்பட்ட நாயை தன் வீட்டு பிள்ளை போல் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வீட்டில் வளர்த்த நாயை காணவில்லை என்பதால் புருஷானூர் மட்டுமின்றி பஞ்சமாதேவி, வானியம்பாளையம், பண்ருட்டி வரை நாயை தேடினர். எங்கும் கிடைக்காத்தால் மனமுடைந்த தம்பதியினர், நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 ஆயிரம் பரிசு வழங்கப்படுமென போஸ்டர் அடித்து சுவர்களில் விளம்பராக ஒட்டியுள்ளனர்.

நாயை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் நாய் காணமல் போய் ஏழு நாட்களுக்கு மேல் ஆகியுள்ளதால் யாராவது தங்கள் நாயை கண்டால் 8072791463 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். வீட்டில் ஒரு பிள்ளையைபோல வளர்ந்த சோபியா, கழனியில் கட்டி வைத்த மாடுகளை தினமும் மாலை நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வரும் வேலையையும் செய்யும் என்று தம்பதி வேதனையை தெரிவித்துள்ளனர்

top videos
    First published:

    Tags: Local News, Villupuram