முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தண்ணீரில் மிதக்கும் கல்லை ஆச்சரியத்துடன் கண்டு சென்ற பொதுமக்கள்...

விழுப்புரத்தில் தண்ணீரில் மிதக்கும் கல்லை ஆச்சரியத்துடன் கண்டு சென்ற பொதுமக்கள்...

X
மிதக்கும்

மிதக்கும் கல்

Villupuram News | விழுப்புரத்தில் ராம நவமியை முன்னிட்டு ராமர் பாலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிதக்கும் கல்லை எடுத்து வந்து தண்ணீரில் மிதக்க விட்டு காட்டிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம நவமியை முன்னிட்டு ராமர் பாலம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு மிதக்கும் கல்லை எடுத்துச் சென்று அங்கு அதை வைத்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ”மிதக்கும் கல் குறித்தும் அதன் தன்மை குறித்தும் எடுத்துரைத்து இதே போன்ற கற்களை கொண்டு தான் ராமர் சேது சமுத்திரத்தின் மீது பாலத்தை அமைத்ததாகவும், அதில் பயணித்து தான் சீதையை மீட்டதாக” விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கல் கையால் தூக்கினால் எடை அதிகமாகவும் அதே சமயம் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. பொதுமக்கள் இதனை தண்ணீரில் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமிர்தகடேஸ்வரர், சந்தான கோபாலபுரம் கிருஷ்ணர், மருதுார் காளியம்மன், பூந்தோட்டம் மாரியம்மன் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் மிதக்கும் கல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    First published:

    Tags: Local News, Villupuram