முகப்பு /விழுப்புரம் /

Villuppuram Weather Update : மண்டையை பிளக்கும் கோடை வெயில்.. வெளியில் தலைகாட்ட தயங்கும் விழுப்புரம் மக்கள்..

Villuppuram Weather Update : மண்டையை பிளக்கும் கோடை வெயில்.. வெளியில் தலைகாட்ட தயங்கும் விழுப்புரம் மக்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Villuppuram Weather Update : தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் வீசும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட தயங்குகின்றனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த  17ல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் இன்று (18.05.2023) முதல் வரும் 21.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோடை வெயில்

அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அதுபோல விழுப்புரத்திலும் பகல் 10 மணிக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குடையை கொண்டும். தலையில் துண்டு போட்டுக்கொண்டும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க : ஈரோடு அருகே இப்படி ஒரு அருவி இருக்கா? கோடை காலத்தை கழிக்க சூப்பர் ஸ்பாட்!

மேலும் வெப்ப சலனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குளிர்பானங்கள், கூழ் போன்றவற்றை சாப்பிட்டு, வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மருத்துவர்கள் அறிவுரையின்படி, எந்த நேரத்தில் வெளியே வரவேண்டும் என்பது பற்றியும், எப்படிப்பட்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Villupuram, Weather News in Tamil