Home /viluppuram /

Villupuram : குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அவதி.. 

Villupuram : குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அவதி.. 

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District : விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டில்குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும், புகார் தெரிவித்தும் எந்தவொரு  நடவடிக்கை எடுக்கவில்லை என  மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெரு, மாசிலாமணிபேட்டை, கமலா நகர், மேல்தெரு, முகமதியார் தெரு ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2 மாதங்களாக குடிதண்ணீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு உடல் உபாதைக்கும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அசுத்தம் நிறைந்தவாறு வரும் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு  ஆளாகியுள்ளனர். .

இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களிடம், நகராட்சி பொறியாளர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த வார்டு குறித்து வார்டின் கவுன்சிலர் ராதிகா கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதிக்கு வரும் குடிநீர் தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இந்த நீர் பொதுமக்கள் குடிப்பதற்கு, மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் சரியான முறையில் குப்பைகளை அள்ளுவது இல்லை, கழிவுநீர் வாய்க்கால் சரி செய்யப்படுவதில்லை, வாரத்திற்கு ஒரு முறை கொசு மருந்து போன்றவற்றை அடிப்பதில்லை இதுபோன்ற நகராட்சி அலுவலகத்தில் இருந்து பொது மக்களுக்கு வரக்கூடிய எந்த ஒரு நல்ல செயலும் இப்பகுதிக்கு வருவதில்லை.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களிடம், நகராட்சி பொறியாளர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும், மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வார்டின் கவுன்சிலர் ராதிகா கூறினார்.

மேலும், அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ந்து குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது வாடிக்கையாகி வருகிறது நாங்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் வீட்டு உபயோகத்திற்கு வெளியில் இருந்து தண்ணீர் வாங்கி வருகிறோம். அதற்காகவே மாத மாதம் ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது. எங்கள் பகுதியில் எந்த ஒரு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை,எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்,அப்பகுதி பொதுமக்கள் 27.06.22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி