முகப்பு /விழுப்புரம் /

Akshaya Tritiya 2023 : ஜுவல்லரி கடைகளில் நகை வாங்க குவிந்த விழுப்புரம் மக்கள்!

Akshaya Tritiya 2023 : ஜுவல்லரி கடைகளில் நகை வாங்க குவிந்த விழுப்புரம் மக்கள்!

X
மாதிரி

மாதிரி படம்

Akshaya Tritiya 2023 : விழுப்புரத்தில் அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதற்கு நகை கடையில் பொதுமக்கள் குவிந்து வண்ணம் உள்ளனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று தங்க நகைகள் அல்லது தங்க நாணயம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. இந்த ஆண்டு இன்றும், நாளையும் என 2 நாட்கள் திருதியை நாளாக கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில், விழுப்புரத்தில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. வாடிக்யைாளர்களும் காலை முதலே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்கி வருகின்றனர். அனைத்து நகைக் கடைகளிலும் காலை முதலே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தங்கம் விலை நேற்றைய விலையயை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5575 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி 80.40 பைசாவிற்கும் விற்பனை ஆகிறது. விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள நகை கடைகள், மற்றும் இங்குள்ள பிரபலமான நகைக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது.

நகைக்கடைகளில் குவிந்த மக்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தங்க நாணயம் வாங்க வந்தவர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் நகை வாங்க வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை வாங்கி செல்கின்றனர்.

    First published:

    Tags: Akshaya Tritiya, Local News, Villupuram