ஹோம் /விழுப்புரம் /

எங்களுக்கும் ”செல்ஃபி பாயிண்ட்” வந்துடுச்சி - விழுப்புரம் இளசுகள் அலப்பறை இனி ஆரம்பம்

எங்களுக்கும் ”செல்ஃபி பாயிண்ட்” வந்துடுச்சி - விழுப்புரம் இளசுகள் அலப்பறை இனி ஆரம்பம்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villuppuram Selfie Point : விழுப்புரத்தை அழகுபடுத்தும் விதமாகவும், பொதுமக்களின் கவனத்தை பெறுவதற்காகவும் 'ஐ லவ் விழுப்புரம்' என்ற எழுத்து வடிவில் அழகான வரவேற்பு சின்னம், விழுப்புரம் ரயில்வே சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தை அழகுபடுத்தும் விதமாகவும், பொதுமக்களின் கவனத்தை பெறுவதற்காகவும், விழுப்புர நகர மக்கள் பல ஆண்டுகளாக ஏங்கிய விஷயமாகவும் “ஐ லவ் விழுப்புரம்” என்ற எழுத்து வடிவில் அழகான வரவேற்பு சின்னம், விழுப்புரம் ரயில்வே சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, கோவை, திருவண்ணாமலை போன்ற பெரு நகரங்களில் அந்தந்த ஊர்களை அழகுபடுத்துவதற்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் “ஐ லவ் கோவை”, “ஐ லவ் திருவண்ணாமலை”, “ஐ லவ் திருச்சி”, “நம்ம சென்னை” போன்ற செல்ஃபி பாயிண்ட்கள் அமைக்கப்பட்டன.

அந்த வரவேற்பு சின்னங்களில் புகைப்படம் எடுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர். இதனால் மற்ற பெருநகரங்களிலும் செல்பி பாயிண்ட்கள் வைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்த்த விழுப்புரம் நகர மக்களும் நம்ம ஊரில் இது போன்று ஒன்று வராதா என ஏங்கிய நாட்கள் நிறைய உண்டு என விழுப்புரம் இளைஞர்கள் கூறினர். தற்போது அந்த ஏக்கத்திற்கு தீர்வாக விழுப்புரத்திலும் “ஐ லவ் விழுப்புரம்” என்ற அழகான செல்ஃபி பாயிண்ட் வந்துள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் ஐ லவ் விழுப்புரம் என்று எழுத்து வடிவில் செல்பி பாயிண்ட் வைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை காண்பதற்காகவே பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். “ஐ லவ் விழுப்புரம்” பக்கத்திலிருந்து இளைஞர்கள் தற்போதே செல்பி எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இதுகுறித்து விழுப்புரம் இளைஞர்கள் கூறுகையில், ”நீண்ட நாள் கனவு நினைவானது போல இருக்கிறது.  எங்களுக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்லும்போது “ஐ லவ் திருவண்ணாமலை” போன்ற எழுத்து வடிவில் இருக்கும். நம்ம மாவட்டத்திற்கு வராதா? என ஏங்கினோம்.  ஆனால் தற்போது “ஐ லவ் விழுப்புரம்” என்ற சின்னம் விழுப்புரம் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இருந்தாலும், இதுபோன்ற செல்பி பாயிண்ட் விழுப்புரம் பேருந்து நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் பொது மக்களுக்கும் தெரியும் வகையில் வைத்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்” என இளைஞர்கள் கூறினர்.

First published:

Tags: Local News, Villupuram