ஹோம் /விழுப்புரம் /

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Tenpennai River Festival | விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி  மாவட்ட மக்கள் ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தான் இந்த தென்பெண்ணை ஆற்று திருவிழா. பொங்கல் பண்டிகையில் 4ம் நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தான் இந்த தென்பெண்ணை ஆற்று திருவிழா. பொங்கல் பண்டிகையில் 4ம் நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படும். இந்த நாளில் தென்பெண்ணை ஆற்றில் மக்கள் குடும்பத்தினருடன் கூடி நேரம் செலவிட்டு மகிழ்வர். அதேபோல் சுற்றியுள்ள கோயில்களில் உள்ள உற்சவர்கள் தென்பெண்ணை ஆற்றில் எழுந்தருள்வர். மணலூர்பேட்டை மற்றும் விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆறு ஆகிய 2 இடங்களில் இந்த ஆற்று திருவிழா நடைபெறுகிறது.

அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் இங்கு குவிவதால் ஆற்று திருவிழாவிற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருக்கோவிலூரை பொறுத்தவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளதால் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மணலூர்பேட்டையில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறுவதால் அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை புரிவார்கள். இதன் காரணமாக அங்கும் கூடுதல் காவல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் 2 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதற்கென தனி காவலர்கள் நியமனம் செய்தது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் உள்ளே செல்லும் பகுதி மற்றும் ஆற்றின் மையப்பகுதி என இரண்டு பகுதிகளிலும் சேர்த்து 18 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Villupuram