ஹோம் /விழுப்புரம் /

ஆயுதபூஜைக்கான பொருட்களை வாங்க குவிந்த மக்கள்.. விழுப்புரம் நகர வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 

ஆயுதபூஜைக்கான பொருட்களை வாங்க குவிந்த மக்கள்.. விழுப்புரம் நகர வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 

விழுப்புரம்

விழுப்புரம்

Ayudha Poojai at Villupuram | விழுப்புரம் நகரின் எம்ஜி ரோடு , பாகர்ஷா வீதி போன்ற பகுதிகளில் பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்கு விழுப்புரம் சுற்றுப்புற பகுதி மக்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

ஆயுதபூஜை, விஜயதசமி நெருங்கிய நிலையில் அவல், பொரி, பழங்கள், பூ உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மார்க்கெட் வீதியில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி பண்டிகைகள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி பண்டிகையின் 9 வது நாள் ஆயுத பூஜை விழா வாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோயில்கள் மட்டுமல்லாது, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

விழுப்புரம் நகரின் எம்ஜி ரோடு , பாகர்ஷா வீதி, போன்ற பகுதிகளில் பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான கடைகள் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் விழுப்புரம் நகர் மட்டுமல்லாது மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பூஜை பொருட்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்காக ஏராளமான மக்கள் இப்பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க:  விழுப்புரம் விவசாயிகளே.. இந்த பயிர்களுக்கு 40%  மானியம் தராங்க..

மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் பொருட்களை வாங்க வருவோர் தங்களின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்வதால் விழுப்புரம் நகரின் பெரும்பான்மையான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவல் - பொரி விற்பனை

பூ விலை:

ஆயுதபூஜையையொட்டி விழுப்புரத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ

800 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 350 ரூபாய்க்கும், மஞ்சள் சாமந்தி 350 ரூபாய்க்கும், முல்லை கிலோ 700,750 க்கும், சம்மங்கி 350 ரூபாய்க்கும், அரலி 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1000 த்திற்கும், கேந்தி சாமந்தி 100 ரூபாய்க்கும், கோழிக் கொண்டை 100 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 400 ரூபாய்க்கும், சாதிமல்லி 800 ரூபாய் என மார்க்கெட்டில் விற்கப்பட்டது.

மேலும் படிக்க: தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது எப்படி? 

விலை அதிகம் என்றாலும் பூக்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பூசணி விற்பனை

திருஷ்டி பூசணிக்காய்:

இதேபோல ஆயுதபூஜையன்று வாகனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக பூசணிக்காய் விற்பனையும் ஒருபக்கம் களைகட்டியுள்ளது.

மேலும் படிக்க:  சோழ மன்னனை சிறைபிடித்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.. 13-ம் நூற்றாண்டு கற்சிலை கண்டெடுப்பு

ஒரு கிலோ எடை கொண்ட கல்யாண பூசணிக்காய் 30 ரூபாயிலிருந்து விற்பனையாகிறது. 20, ருபாய், 40 ரூபாய் என பொறி பைகளில் விற்பனை செய்யப்படுகிறது . ஒரு கிலோ பொறி 90 ரூபாய், ஒரு கிலோ அவல் 50 ரூபாய், ஒரு கிலோ பொட்டுக்கடலை 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆயுதபூஜை பொருட்களை வாங்குவதற்காக மார்க்கெட் வீதியில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் வருகின்றனர்.

இதனால் பல முக்கிய வீடுகளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது .இன்னும் நேரம் செல்ல செல்ல மாலை நேரத்தில் அதிகமாக கூட்டம் அதிகரிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Ayudha poojai, Local News, Villupuram