ஹோம் /விழுப்புரம் /

தீபாவளிக்கு பட்டாசு, துணிகள் வாங்க விழுப்புரத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்..

தீபாவளிக்கு பட்டாசு, துணிகள் வாங்க விழுப்புரத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்..

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்..

Villupuram Deepavali Shopping 2022 | தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். தீபாவளி முன்னிட்டு பட்டாசு மற்றும் துணிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் விழுப்புரம் கடைத்தெருக்களில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக விழுப்புரத்தில் பொதுமக்கள் முக்கிய கடைவீதிகளில் படையெடுத்து வருகின்றனர். விழுப்புரத்தில்  கடைகள் நிறைந்த பாகர்ஷா வீதி, எம். ஜி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.  

தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே துணி கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கியது.

இனிப்பு கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஆர்டர்கள் அதிகளவில் வர தொடங்கியது . இனிப்பு கடைகளில் தொழில் நிறுவனங்களில் இருந்து வரும் ஆர்டர்கள், பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பளிப்பாக கொடுப்பதற்காக இனிப்புகளை வாங்க தொடங்கியுள்ளனர். தாமதமாக பட்டாசு விற்பனை தொடங்கினாலும் பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் துணி கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புதிய ஆடைகள் வாங்க ஆரம்பித்துள்ளனர்

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Villupuram