ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தண்டவாள பராமரிப்பு பணி - பயணிகள் ரயில் ரத்து

விழுப்புரத்தில் தண்டவாள பராமரிப்பு பணி - பயணிகள் ரயில் ரத்து

விழுப்புரம் ரயில் நிலையம்

விழுப்புரம் ரயில் நிலையம்

Villupuram Passenger Train Cancelled | விழுப்புரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம்- மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு முக்கிய வழித்தடமாக இருக்கும் ரயில் நிலையங்களில், விழுப்புரம் ரயில் நிலையம் முக்கியமான ஒன்று. இங்குள்ள தண்டவாளங்கள் சரக்கு ரயில் பெட்டிகளின் பாரத்தை தாங்கக்கூடிய வகையில் இருக்கிறதா என்றும், விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் அதிவிரைவு ரயில்கள் செல்லும்போதும் தண்டவாளங்கள் உறுதியாக இருக்கின்றனவா எனவும் அவ்வப்போது பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம்.

  அதன்படி நேற்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள 4 மற்றும் 5ஆவது நடைமேடை அருகில் தண்டவாள பாதை பிரியும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டன. அப்போது, தண்டவாளங்களின் உறுதித்தன்மையை மேம்படுத்தும் வகையில் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

  அப்போது, புதியதாக ஜல்லிக்கற்கள் கொட்டும் பணிகளும், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் நடத்தப்பட்டன. குறிப்பாக சரக்கு ரயில்கள் செல்லக்கூடிய தண்டவாள பகுதிகளில் தடம் புரளாமல் எளிதாக சென்றடையும் வகையில் அதன் தண்டவாளங்களை வலுப்படுத்தும் விதமாகவும், சரக்கு ரயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கு வசதியாகவும் இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இந்தப் பணிகள் இன்றும் தொடர்ந்து  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

  இதனால், விழுப்புரம்- மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்- விழுப்புரம் ஆகிய பயணிகள் ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 11.15 மணிக்கு வந்ததும் டீசல் என்ஜின் மாற்றப்பட்டு பகல் 12.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  திருப்பதி- புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் விக்கிரவாண்டி- புதுச்சேரி வரை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விக்கிரவாண்டியில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருப்பதிக்கு புறப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் கடலூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டது. அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு இரவு 9 மணிக்கு வரும் பயணிகள் ரயில் விழுப்புரம் வராமல் கடலூரோடு நிறுத்தப்பட்டது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Train, Villupuram