ஹோம் /விழுப்புரம் /

இடுகாடு இல்லாமல் திண்டாடும் பணங்குப்பம் கிராம மக்கள்.. வாய்க்கால் கரை மீது உடல்களை எரிக்கும் அவலம்...

இடுகாடு இல்லாமல் திண்டாடும் பணங்குப்பம் கிராம மக்கள்.. வாய்க்கால் கரை மீது உடல்களை எரிக்கும் அவலம்...

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News : விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள பணங்குப்பம் புதுநகர் கிராமத்தினர் சுடுகாடு இல்லாமல் பெரிதும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து விவரிக்கும் வீடியோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள பணங்குப்பம் புதுநகரில் 27 வருடங்களாக நிரந்தர இடுகாடு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும், பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் இறங்குவோம் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள பணங்குப்பம் புதுநகர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கென இடுகாடு இல்லாததால், கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இதே பகுதியிலுள்ள நரையூரான் வாய்க்காலை சுடுகாடு போல  பயன்படுத்தி வருகின்றனர்.

பணங்குப்பம் புதுநகர்

மழைக்காலங்களில் மரணங்கள் ஏற்பட்டால், அடக்கம் செய்ய இடமில்லாமல் அருகிலுள்ள கோலியனூர் பஞ்சாயத்து சுடுகாட்டினை பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இரு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நரையூரான் வாய்க்காலில் நீர் சென்றால் கரையின் மேல் பகுதியிலுள்ள சாலையிலேயே சடலத்தை வைத்து எரிக்க வேண்டிய அவல நிலை உள்ளதால் தங்களுக்கு நிரந்தரமாக சுடுகாடு அமைத்து தரக்கோரி  கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பணங்குப்பம் புதுநகர் கிராமத்தினர்

நிரந்தர சுடுகாடு கேட்டு போராட்டங்கள், சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபடும் போதெல்லாம் அதிகாரிகள் சமாதானம் செய்து விரைவில் இடுகாடு அமைத்து தருவதாக கூறி போராட்டத்தினை கலைக்க முயற்சிக்கிறார்களே தவிர இது நாள் வரை நிரந்தர சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை வேதனை தெரிவிக்கின்றனர்.

பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

மேலும், இப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (30,000 லிட்டர் ) மட்டுமே உள்ளது. அந்த நீர்த்தேக்கத் தொட்டியிலும் தற்போது விரிசல்கள் ஏற்பட்டு, தூண்கள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு நீர்த்தேக்கத் தொட்டி சிதலமடைந்து காணப்பட்டு வருகிறது.

பணங்குப்பம்

தற்போது மழைக்காலம் என்பதால் நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. அதுபோன்று ஏதேனும் விபத்து ஏற்படும் முன்னர் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய நீர்த்தேக்கத் தொட்டியை கட்டித்தர வேண்டும் எனவும், ஒரு நியாய விலை கடை அமைத்து தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீடுகளுக்கான குடிநீர் குழாய்கள் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இதுநாள் வரையிலும் அந்த குழாயிலிருந்து தண்ணீர் வரவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.வ்v

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram