விழுப்புரம் அருகே பூரிக்குடிசை பகுதியில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பனை திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு பனைபொருட்களான உணவு கண்காட்சி, கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை என்ற கிராமத்தில் பனங்கனவு திருவிழா இன்றும் நாளையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் தொடக்கமாக பூரிக்குடிசை கிராமம் முழுவதுமாக 100க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக பறை அடித்தும் சிலம்பம் ஆடிவந்து பனை மரத்திற்கு படையலிட்டு திருவிழாவினை தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து பனை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பனை கள்ளை உண்டு மகிழ்ந்தனர். பனை திருவிழாவில் பனை பொருட்களால் செய்யப்பட்டும் அழகு சார்ந்த பொருட்கள், இயற்கை விதை பொருட்கள் கண்காட்சியாக வைக்கபட்டு விற்பனை செய்யபட்டன.
மேலும் பனையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு பனையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பனையேறிகள் தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமெனவும், கள் ஒரு உணவு பொருள் என்பதை அனைவரிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பனை மரத்தின் பொருட்களால் உணவு மற்றும் அழகுப்பொருட்கள் செய்து பொருளாதாரத்தினை உயர்த்த இந்தியாவிலேயே முதல் முறையாக பூரிக்குடிசையில் நடைபெறும் பனை திருவிழா அனைவரிடத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இந்த பனை கனவு திருவிழாவின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பனை ஏறும் தொழிலாளர்களின் முக்கியத்துவம் மற்ற பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பனை கனவு திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பனை திருவிழாவுக்கு விழுப்புரம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் சார்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram