Home /viluppuram /

அமைச்சர் அன்பில் மகேஷ் கையால் நம்மாழ்வார் விருது பெற்ற இயற்கை விவசாயி

அமைச்சர் அன்பில் மகேஷ் கையால் நம்மாழ்வார் விருது பெற்ற இயற்கை விவசாயி

Natural

Natural agriculture that saves the life of the farmer - prosperity in income

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கையால், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராதாகிருஷ்ணன் நம்மாழ்வார் விருது பெற்றார்.

    விவசாயமே நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. பல விவசாயிகள் இயற்கை விவசாய முறையை பின்பற்றி வருகிறார்கள். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய முறைப்படி பயிரிடுதல் போன்ற பல வழிமுறைகளில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். படித்த பட்டதாரிகள் கூட இயற்கை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    விவசாயிகளின் முக்கிய நோக்கமாக விளங்குவது என்னவென்றால், விவசாயத்தினை இயற்கை முறையில் செய்து பின்வரும் சந்ததியினருக்கு நல்ல விளைநிலங்களையும் உணவையும் வழங்க வேண்டும் என்பதே ஆகும்.

    அதுபோல, விழுப்புரம் மாவட்டம் கண்டவாறு கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ( 67) என்பவர் 25 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தற்போது 25 வது வருடம் நிறைவடைந்து வெள்ளிவிழா காணும் வகையில் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குகிறார்.

    இயற்கை விவசாயத்தின் மேலுள்ள ஆர்வத்தையும் அதன் வழிமுறைகள் பற்றியும் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நான் முதலில் செயற்கை விவசாயம் தான் கடைப்பிடித்து வந்தேன். அதில் அதிக அளவில் நாம் பார்க்கவேண்டும் என ஓடிக்கொண்டே இருந்தேன்.

    அதன்பின் ஒரு நாள் என்னுடைய விளைநிலத்தில் நெல்லுக்கு பூச்சிமருந்து தெளிக்கையில், அதன் கீற்று என்னுடைய காலில் கிழித்துவிட்டது, அதை கவனிக்காமல் நான் தொடர்ந்து மருந்து அடித்துக் கொண்டிருந்தபோது ,திடிரென நான் மயங்கி கீழே விழுந்து விட்டேன். அப்போது பக்கத்தில் இருந்த நபர்கள் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள்.

    அங்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் முதலில் காயத்தைப் பார்த்தனர். அதன்பின் இந்தப் பூச்சி மருந்துக்குரிய ஆன்டிபயாடிக் மருந்து எனக்கு கொடுத்து என்னை காப்பாற்றினார்கள்.

    அந்த நிகழ்வு தான் நான் செயற்கை விவசாயத்தை கைவிட காரணம்.அதன் பிறகு இயற்கை விவசாயத்தில் எப்படி நல்ல லாபத்தை பார்த்து,நல்ல முறையில் விவசாயம் செய்யலாம் என தேடினேன்.

    முதலில் பல தோல்விகளை சந்தித்து, தற்போது பல பாரம்பரிய நெல் ரகங்களை பயிர்களில் அதற்குரிய உரங்களை நானே தயாரிக்கிறேன். பாரம்பரிய இயற்கை நெல் ரகங்களை மற்ற விவசாயிகளுக்கு விற்பனைக்கும் தருகிறேன்.

    தற்போது நான் வைத்திருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இயற்கை முறையில விவசாயம் பார்த்து வருகிறேன் வீட்டில் சமைக்கும் கறிகளில் முதல்கொண்டு நானே அறுவடை செய்கிறேன்.

    நான் மேற்கொண்ட இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உலகப் புகழ்பெற்ற நெல் திருவிழா நடைபெற்றது இந்த திருவிழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புரிந்தார்.

    பல மாவட்டங்களில் இயற்கை வேளாண் விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் எனக்கும் நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது இந்த விருது என்னை மென்மேலும் இயற்கை விவசாயத்தில் சாதிக்க ஊன்றுகோலாக விளங்கும் எனவும் மற்ற விவசாய அனைவரும், இயற்கை விவசாயத்தை கடைபிடிக்குமாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி