முகப்பு /விழுப்புரம் /

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!

X
மாற்றுத்திறனாளிகளுக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்

Self Employment : விழுப்புரத்தில், வாழ்ந்து காட்டும் திட்டத்தின் கீழ் சமுதாயம் திறன் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக வாழ்ந்து காட்டும் திட்டத்தின் கீழ் சமுதாயம் திறன் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அகர்பத்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம், வேம்பி கிராமத்தில் வாழ்ந்து காட்டும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாயம் திறன் பள்ளியின் மூலம் அகர்பத்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கு வேம்பி ஊராட்சியை சேர்ந்த 12 மாற்றுத்திறனாளிகள் 10 நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்

இந்த பயிற்சி வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளராக பனையபுரம் பகுதியை சேர்ந்த நீலா ராஜுவ் மேனன் செயல்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு பினாயில், அகர்பத்தி, குளியல் சோப்பு, சானிடைசர், மெழுகுவர்த்தி, சோப் ஆயில், நீலம் போன்ற 12 பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகளை மாற்றுத்திறனாளிகளுஙககு நன்கு புரியும் வகையில் செய்முறை விளக்கமாக அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செய்முறைக்கு உடைய அனைத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. மேலும் வாழ்ந்து காட்டும் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்தில் லோன் வசதியும் ஏற்படுத்தி தரப்படஉள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த பயிற்சி வகுப்புகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அது மட்டுமல்லாமல் எங்களுக்கு மானியத்தை கடனுதவி வழங்கி எங்கள் வாழ்விற்கு வழி காட்ட வேண்டும் எனவும் கூறினர்.

First published:

Tags: Local News, Villupuram