முகப்பு /விழுப்புரம் /

மரக்காணத்தில் லட்ச தீப திருவிழா.. ஒரு லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஆஞ்சநேயர் கோயில்!

மரக்காணத்தில் லட்ச தீப திருவிழா.. ஒரு லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஆஞ்சநேயர் கோயில்!

X
தீப

தீப ஒளியில் ஜொலித்த கோயில்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்   பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சாந்த சொருப ஆஞ்சநேயர் திருக்கோயில்.  இக்கோயிலில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு 31 ஆம் ஆண்டாக லட்ச தீப விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சந்தனக்காப்பு, வடை மாலை அணிவித்தல், துளசி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக லட்ச தீபங்கள் எற்றும் நிகழ்வு சிறப்பாக தொடங்கி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அகல் விளக்கில் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றி கடவுளுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனை தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேடை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்தனர்.

    First published:

    Tags: Festival, Local News, Villupuram