முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் : தைப்பூசத்தையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சுத்த சன்மார்க்கத்தினர்

விழுப்புரம் : தைப்பூசத்தையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சுத்த சன்மார்க்கத்தினர்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villuppuram News : விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ளது வள்ளலார் அருள் மாளிகையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்தி்ட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ளது வள்ளலார் அருள் மாளிகை. வரலாறு போற்றும் வகையிலும் வள்ளலார் சொன்ன வழியிலும் அவருடைய சிஷ்யர்கள் பல உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். அதேபோல் விழுப்புரத்தில் அருட்பிரகாச வள்ளலார் துவக்கி அருளிய 152வது ஆண்டையொட்டி அருள் மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய டிரஸ்ட் உறுப்பினர்கள் 82வது ஆண்டாக, தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் என ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் வேஷ்டி புடவை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மேலும் 1000 நபர்களுக்கு 5 கிலோ அரிசி. 3 கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்பு , வேஷ்டி, புடவை, பெட்ஷீட் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விழுப்புரம் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பயனாளிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Villupuram