ஹோம் /விழுப்புரம் /

 சுண்டியிழுக்கும் நீல நிற கிருஷ்ணர் சிலைகள் - கிருஷ்ணர் ஜெயந்தி ஸ்பெஷல் சேல்ஸ்.. களைகட்டும் கடைத் தெருகள்..

 சுண்டியிழுக்கும் நீல நிற கிருஷ்ணர் சிலைகள் - கிருஷ்ணர் ஜெயந்தி ஸ்பெஷல் சேல்ஸ்.. களைகட்டும் கடைத் தெருகள்..

அழகு

அழகு கிருஷ்ணர் சிலைகள்..

Krishna Jayanthi - Gokulashtami : விழுப்புரம் அருகே திருவிக வீதியில் கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு கண்ணைக் கவரும் வகையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இதனை ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

கிருஷ்ணர் அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 19ம் தேதியில் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெருமாள் கோயில்களில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மேலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணன் பெயரை உச்சரித்து அவரது சிலைக்கு பூஜை செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும் என்பதால் வீடுகளிலும் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். இதற்காக கிருஷ்ணர் பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகள்..

கிருஷ்ணரை வீட்டிற்குள் வரவேற்கும் விதமாக அவரது பாதம் மாக்கோலமாக வரையப்படும். இதன் மூலம் கிருஷ்ணர், வீட்டிற்குள் நடந்து வருவதாக ஐதீகமாக இருக்கிறது. மேலும் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், சீடை, முறுக்கு, எள்ளு ஆகியவற்றை படைத்து வழிபடுவார்கள். கிருஷ்ணர் சிலைகள் வைத்து வழிபடுதல் மூலம் குழந்தைகள் பிறக்க வேண்டும், குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற வகையில் கிருஷ்ணர் சிலைகளை வைத்து வழிபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகள்..

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விழுப்புரம் நகரில் கிருஷ்ணர் பொம்மைகளின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Spectacular Blue Krishna Idols - Selling Amazom
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகள்..

விழுப்புரம் திரு.வி.க. வீதி, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்காக உள்ளது. சிறிய அளவிலான பொம்மைகள் ரூ.50-ல் இருந்து பெரிய அளவிலான பொம்மைகள் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடம் புது புது சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது அதாவது கிருஷ்ணர் சீதையுடன் இருப்பது போன்றும் தவழும் கிருஷ்ணர் , போன்ற பல வகைகளில் கிருஷ்ண சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது .

கிருஷ்ணர் சிலைகளை வாங்கும் பொதுமக்கள்

மேலும் கிருஷ்ணர் சிலைகள் அனைத்தும் நீலநிறத்தில் கண்ணைக் கவரும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று ரசித்து கிருஷ்ணர் சிலையை வாங்கி செல்கின்றனர். மேலும் நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போதுமான அளவிற்கு கிருஷ்ணர் சிலைகள் விற்பனை ஆகிறது என கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Krishna Jayanthi, Local News, Villupuram