ஹோம் /விழுப்புரம் /

மாதம் 40,000 வருமானம்.. நிரந்தர லாபம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு தொழில்..

மாதம் 40,000 வருமானம்.. நிரந்தர லாபம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு தொழில்..

X
நிரந்தர

நிரந்தர வருமானம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு

Oil Palm Cultivation Business in Tamil | விழுப்புரம் மாவட்டம் ஒருகோடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பாமாயில் எண்ணெய் பனை மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். பனை வளர்ப்பு குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்தில் பாமாயில் மர சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர் விவசாயிகள். நிலையான வருமானம் ஈட்டுவதற்கு சிறந்த பயிர் என்றால் அது பாமாயில் தான் என அடித்துக் கூறுகிறார் விழுப்புரத்தை சேர்ந்த விவசாயி கூறுகிறார்.

விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி சூர்யா (வயது 32) கடந்த 15 வருடங்களாக பாமாயில் மர சாகுபடி செய்து வருகிறார். நிலையான வருமானம் தருவதில் பாமாயில் ஒரு சிறந்த பயிராக இருக்கிறது என்கிறார்.

பாமாயில் எண்ணெய் சாகுபடி குறித்து பல்வேறு தகவல்களை விவசாயி சூர்யா நம்மிடையே பகிர்ந்தார். அவர் கூறுகையில்.. "2007 ஆம் ஆண்டு பாமாயில் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். பல பயிர்கள் இருந்தாலும் நிலையான வருமானம் தருவது பாமாயில் தான். டெனீரா ரக மரத்தை 6 ஏக்கரில் பயிர் செய்தேன். ஒரு ஏக்கருக்கு 56 செடிகள் என 15 மாத செடிகளை வாங்கி நடவு செய்தேன். பாமாயில் மரங்களுக்கு தண்ணீர் வசதி இருந்தால் நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல மகசூல் கிடைத்ததைத் தொடர்ந்து கூடுதலாக 7 ஏக்கரில் பாமாயில் மரம் வளர்த்து வருகிறேன்.

செடிகள் வைத்து 5 வருடங்களில் காய்கள் காய்க்க ஆரம்பித்து விடும். பாமாயிலுடன் ஊடுபயிராக வேர்க்கடலை, உளுந்து, திணை ஆகியவற்றை பயிர் செய்யலாம். பாமாயில் மரம் வளர்க்க, எண்ணெய் பனை கன்றுகளை தமிழக அரசு, மானிய விலையில் ஒரு ஹெக்டேருக்கு 143 கன்றுகள் என்ற விகிதத்தில் வழங்குகிறது.

மேலும் படிக்க:  விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்களை இலவசமாகவும், மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் செய்ய சலுகைகளும் அரசு வழங்குகிறது.எண்ணெய் சாகுபடி செய்ய குறைவான வேலையாட்கள் மட்டுமே போதுமானது. பாமாயில் மரத்தின் வயதுக்கேற்ப மகசூல் அதிகரிக்கும்.

பாமாயில் பனை மரம் வளர்ப்பில் நிரந்தர வருமானம்

3 வருட மரத்திலிருந்து 5 டன்கள் மகசூல் கிடைக்கும். 5 வருட மரத்திலிருந்து 12 டன்னும், 6 வருட மரத்திலிருந்து 25 டன் எண்ணெய் வித்துக்களும் கிடைக்கும். மரத்தின் ஆயுட்காலம் 30 வருடங்கள் ஆகும்.

மேலும் படிக்க:   மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

கவனத்துடன் பராமரித்தால் ஒரு ஹெக்டருக்கு 30 முதல் 40 டன் வரை மகசூல் ஈட்ட முடியும். 1000 கிலோ பழங்களிலிருந்து குறைந்தபட்சம் 15 முதல் 16 லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

சூர்யா

5 ஏக்கருக்கு மேல் பாமாயில் மரம் பயிரிட்டால் தோட்டக்கலை துறை, மானிய விலையில் மின் மோட்டார் வசதியை செய்து தருகிறது. ஒரு வருடத்தில் ஆட்கூலி, இடுபொருள் போன்ற செலவுகள் போக ஆண்டு ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் என்றும் விவசாயி சூர்யா தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பாமாயில் சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு மற்றும் தோட்டக்கலைத்துறை வழங்கும் பல சலுகைகளை விவசாயிகள் பயன்படுத்தி, போதுமான வருமானத்தை ஈட்டலாம்.

First published:

Tags: Local News, Villupuram