ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்குது கனமழை.. கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை 

விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்குது கனமழை.. கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை 

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் கனமழை..

Villupuram Rains | தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 1) காலை முதலே ஒரு சில இடங்களில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், அனுமந்தை, கூனி மேடு, மஞ்சக்குப்பம், பொம்மையார்பாளையம், ஆரோவில், கோட்டகுப்பம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக 19 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் ,படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்..

மேலும் படிக்க:  கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதால் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது

விழுப்புரத்தில் கனமழை..

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய இருப்பதால், கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கவும், குளிப்பதற்காக கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவை இல்லாமல்   நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Heavy Rains, Local News, Villupuram