முகப்பு /விழுப்புரம் /

யாருடைய வாழ்க்கையை பார்த்தும் வியக்காதீங்க - விழுப்புரத்தில் ‘நீயா நானா’ கோபிநாத் செம ஸ்பீச்!

யாருடைய வாழ்க்கையை பார்த்தும் வியக்காதீங்க - விழுப்புரத்தில் ‘நீயா நானா’ கோபிநாத் செம ஸ்பீச்!

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் ‘நீயா நானா’ கோபிநாத் செம ஸ்பீச்

Neeya Naana Gopinath | விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய 'நீயா நானா' கோபிநாத். வாழ்க்கையில் அனைவருமே சமம்தான் என்று விளக்கிக் கூறினார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களும் மாணவர்களை ஊக்கவிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் பல விருந்தினர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் வருகை புரிந்து பொது மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் விருந்தினராக கலந்து கொண்டார்.அவார் 'நேர்பட பேசு' என்ற தலைப்பின் கீழ் பல்வேறு கருத்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார். முதலில் பொதுமக்கள் யாருடைய வாழ்க்கையும் பார்த்து வியக்க வேண்டாம் எனவும், அனைவருமே சமம்தான் என்றும், வெற்றி என்பது அனைவருக்கும் உரித்தானது போன்ற பல கருத்துக்களை முன்னிறுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

'நீயா நானா' கோபிநாத்தின் பேச்சை கேட்பதற்காக விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ-மாணவியர், கல்லூரி மாணவ-மாணவிகள் எனஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் கோபிநாத் உடன் செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்கு பொதுமக்கள் அலைமோதினர்.

First published:

Tags: Local News, Villupuram