விழுப்புரம் ஆட்சியர் வளாகம் பின்புறம் அமைந்துள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி, சாலைகள் தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆட்சியர் வளாகம் பின்புறத்தில் அமைந்துள்ள சாலையை பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டது. அந்த வேலைகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்பட்டது.
முழுவதுமாக இந்த சாலைகள் சீரமைக்காமல் மூடப்பட்ட இந்த சாலைகள் தற்போது குண்டு குழியுமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதி சாலையை பொதுமக்கள் விழுப்புரம் டு மாம்பழப்பட்டு பிரதான சாலை பிடிப்பதற்கு அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாக விளங்குகிறது.
இப்பகுதியில் எந்நேரமும் வாகனத்தின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் ஆசாரிகள் முழுவதுமாக சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சமாக கூறுகின்றனர்.
மேலும் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இச்சாலையை பார்த்ததும் நண்டு ஊர்ந்து செல்வது போல் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லாததாலும், இந்த சாலையை பயன்படுத்தும் போது நிச்சயமாக விபத்து ஏற்பட நேரிடும் கொண்ட பல இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும் இந்த சாலை குறித்து நியூஸ் 18 உள்ளூர் செய்திகளில் 12.05.2022 அன்று செய்தியாக பதிவிட்டு இருந்தோம்.
இதனையடுத்து, தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்பு நியூஸ் 18 செய்தியின் எதிரொலியால், இந்த சாலை அனைத்தும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுவதுமாக சாலையை அமைப்பதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.