ஹோம் /விழுப்புரம் /

தீபாவளிக்கு விற்பனையாகும் புதிய இனிப்பு வகைகள் - விழுப்புரம் கடைத் தெருக்களில் குவியும் மக்கள் கூட்டம்

தீபாவளிக்கு விற்பனையாகும் புதிய இனிப்பு வகைகள் - விழுப்புரம் கடைத் தெருக்களில் குவியும் மக்கள் கூட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Deepavali Special | விழுப்புரத்தில் உள்ள அர்ச்சனா ரெசிடென்சியில் தீபாவளி ஸ்பெஷலாக ஸ்வீட்ஸ் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வகைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கடைத்தெருக்களில் குவிந்த வண்ணம் வருகிறார்கள். விழுப்புரம் அர்ச்சனா ரெசிடென்சியில்  ஸ்வீட்ஸ் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்கு கடைத்தெருக்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.

அந்தவகையில் விழுப்புரத்தில் உள்ள அர்ச்சனா ரெசிடென்சியில் தீபாவளி ஸ்பெஷலாக ஸ்வீட்ஸ் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்:

இந்த இனிப்பு கண்காட்சியில் பல்வேறு வகையான இனிப்பு வகைகள், இந்த வருட தீபாவளிக்கான புதுரக ஸ்வீட்  வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட ஸ்பெஷல் காஜூ மில்க் பைட்ஸ், டிரை ஃப்ரூட் மில்க், காஜூ சாக்லேட் பைட்ஸ், ரோஸ் காஜு பிஸ்கட், சாக்லேட் காஜு பிஸ்கட், ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு போன்ற வகை இனிப்பு வகைகள்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் அதிரசம், கைமுறுக்கு, சோமாஸ், எல்லடை, பாசி உருண்டை, ரவா உருண்டை, ஸ்பெஷல் அச்சு முறுக்கு என பல இனிப்பு வகைகளும் தீபாவளிக்கு தயாராகி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதிதாக அறிமுகப்படுத்தப்பட இனிப்பு வகைகள் பொதுமக்களை கவரும் வகையில் இருப்பதால் அதிக அளவில் இந்த இனிப்புகளை வாங்கி செல்கிறார் என வியாபாரிகள் மகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர். இனிப்பு வகைகளை வாங்குவதற்கு காலை முதலே ஆர்வம் காட்டி வரும் பொதுமக்கள்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram