ஹோம் /விழுப்புரம் /

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா - பக்தர்கள் கவனத்திற்கு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா - பக்தர்கள் கவனத்திற்கு!

மேல்மலையனூர் அங்காளம்மன்

மேல்மலையனூர் அங்காளம்மன்

Melmalayanur Angalamman Temple | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழாவை முன்னிட்டு  பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து, கணவனை பிரிந்து வாழும் பெண்கள் வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்றும், கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள் மலையனூர் அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், எதிர்வரும் அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அமாவாசை விழா மற்றும் அடுத்த மாதம் (நவம்பர்) 7ஆம் தேதி திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி ஜோதி திருவிழாவை முன்னிட்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆட்சியர் மோகன் கூறுகையில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை விழா, திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி ஜோதி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக வசதிகள் செய்திடவும், குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், காவல்துறையின் மூலம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கோவில்களின் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களில் காலாவதியான பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தீயணைப்புத்துறையின் மூலம் கோவில் வளாகத்தில் தீத்தடுப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்று உத்தரவிடடார். எனவே, விழா நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஏற்பாடுகளை நினைவில் கொண்டு, பாதுகாப்பாகவும், சிரமம் இன்றியும் சாமியை தரிசனம் செய்து நிம்மதியாக வீடு திரும்புங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Temple, Villupuram