முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் டூ மைலாப்பூர்.. விதவிதமாக தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகள் 

விழுப்புரம் டூ மைலாப்பூர்.. விதவிதமாக தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகள் 

X
விழுப்புரம்

விழுப்புரம் - நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு

Villupuram Navarathri Golu | விழுப்புரம் அருகே கரடிபாக்கம்  பகுதியில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு,  கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அருகே கரடிபாக்கம் பகுதியில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு, கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலு பொம்மை தயாரிப்பு முறை பற்றியும், வகைகள் மற்றும் விலை போன்ற தகவல்களை இந்த சிறப்பு தொகுப்பில் விரிவாக காணலாம்..

உலகை ஆளும் சிவபெருமானை வழிபடுவதற்கு ஒரு ராத்திரி தான், ஆனால் அன்னை ஆதிபராசக்திக்கு ஒன்பது இரவுகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அந்த அளவுக்கு நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. நம் நாட்டில் இந்த சமூகம் தான் அல்லது இந்த மாநிலத்தவர்தான் என்ற வரையறை இல்லாமல் இந்தியாவில் பரவலாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழாவினை கொண்டாடுகின்றனர்.

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு

இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கரடிபாக்கம் பகுதியில் நவராத்திரி கொலுவிற்கான பொம்மைகள் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு காகிதக்கூழ் பயன்படுத்தி 20 வகையான கொலு பொம்மை தயாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  விழுப்புரத்தில் தொழில் தொடங்க தாட்கோ திட்டத்தில் நிதி உதவி - தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை

ஐயப்பன், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், ஆண்டாள், ரங்கமன்னார், தட்சணாமூர்த்தி, ராமர் , மகிஷாசுரமர்த்தினி, கிருஷ்ணர், பைரவர் என பல்வேறு வகையான கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

நவராத்திரி கொலு பொம்மைகள்

அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் வரை பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் உயரத்திற்கு ஏற்றார்போல் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை இங்கு தயாரிக்கப்படும் பொம்மையின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் அனைத்து வகையான கொலு பொம்மையும் மயிலாப்பூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  விழுப்புரம் வாசிகளே மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளதா? மானியம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பொம்மை உற்பத்தி செய்முறை:

முதலில் கொலு பொம்மை செய்வதற்கான கலவை தயாரிக்கப்படுகிறது. பசை மாவு கிழங்கு மாவு மைதா மாவு முகத்தில் பூசும் பவுடர், சிமெண்ட் பேப்பர் சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டு அந்த கலவையிலிருந்து பொம்மை செய்யப்படுகிறது. ஒரு காகிதக்கூழ் பொம்மை செய்வதற்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகிறது. 5 நபர்கள் கொண்ட குழுவாக பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளன. கொலுபொம்மைகள் வாங்க விரும்புவோர் 9585858470 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுக்கலாம்..

First published:

Tags: Local News, Navarathri, Villupuram