Home /viluppuram /

இயற்கை முறையில் கால்நடை தீவனம் தயாரித்து அசத்தும் விழுப்புரம் பட்டதாரி பெண்மணி.. 

இயற்கை முறையில் கால்நடை தீவனம் தயாரித்து அசத்தும் விழுப்புரம் பட்டதாரி பெண்மணி.. 

villupuram

villupuram

Villupuram District: விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகேயுள்ள வி. நெற்குணம் கிராமத்தில் இருக்கிறது எஸ்.கே. கால்நடை தீவன தொழிற்சாலை. பட்டதாரி பெண்ணான சங்கீதா நடத்தி வரும் கால்நடை தொழிற்சாலை குறித்து காணலாம்.

  விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகேயுள்ள வி. நெற்குணம் கிராமத்தில் இருக்கிறது எஸ்.கே. கால்நடை தீவன தொழிற்சாலை. கால்நடைகளைப் பாதிக்கும் ரசாயன உணவைத் தவிர்த்து முழுவதும் தானியங்களைக் கொண்டு இயற்கை முறையில் இந்த  கால்நடை தீவனம் தயாரிக்கப்படுகிறது.

  தீவனம் மற்றும் அதன் தயாரிப்பு முறையைப் பற்றி தொழிற்சாலையை நடத்தி வரும் பட்டதாரி பெண்மணியான சங்கீதா கூறுகையில்,  “எங்களின் சொந்த மாட்டுப் பண்ணைக்குத் தேவையான தீவனம் வாங்கி நஷ்டமடைய, அதிலிருந்து மீள்வதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த தீவன தொழிற்சாலை.

  “நான் பிஇ., எம்பிஏ படித்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. என் கணவர் கலையரசன் மாட்டுப்பண்ணை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் கணக்குப் பார்க்கும்போது நஷ்டம் தெரியவந்தது.

  அப்போது ஒரு மாட்டுக்கு  தினமும் 40 ரூபாய் செலவானது. பாலின் விலை மிகக்குறைவாக இருந்தது. தீவன செலவைக் குறைத்தால்தான் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும். அந்த நேரத்தில் அருகிலுள்ள புதுச்சேரியிலிருந்து பீர் ஆலைக் கழிவுகளை (பீர் மால்ட்) வாங்கிப் பயன்படுத்துங்கள் என்று ஒரு கால்நடை மருத்துவர் பரிந்துரைத்தார்.

  அதன்பின்,கடந்த 10 ஆண்டுகளாக தீவனத்தை மொத்தமாக வியாபாரம் செய்துவருகிறோம்.
  உலர் தீவனம் தயாரிப்பை  தொடங்கியபோதுதான் தீவன தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்கினோம்.

  2 வகையான தீவனங்கள் :

  ஈரத் தீவனம், உலர் தீவனம் என 2 வகையான தீவனங்களைத் தயாரித்து வருகிறோம். எங்கள் பண்ணையில் சோதித்துப் பார்த்துத்தான் தீவன தயாரிப்பை பெரிய அளவில் செய்யத் தொடங்கினோம்.

  நான்கு ரூபாய்க்குக் கீழே எந்த தீவனமும் கிடைக்காதபோது, எங்களுடைய தீவனம் மக்களிடம் வெற்றிபெறும் என்று நம்பினோம். எங்கள் ஈரத் தீவனத்தை லேப் டெஸ்ட் செய்துபார்த்தோம். 45 நாட்கள் உறையில் வைத்துப் பார்த்தால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அப்படியே சிறு மாற்றங்கள் நடந்தாலும், கால்நடைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்தது.

  பின்னர் தரச் சான்றிதழ் கிடைத்ததும் தீவனங்களை முறையாக பேக் செய்து விற்பனைக்கு அனுப்பினோம்” என்று ஆர்வம் பொங்கத் தொழில் தொடங்கிய காலத்தை நினைவுகூர்ந்தார்.

  பீர் ஆலைக்கழிவில் கோதுமை, மக்காச்சோளம், பார்லி, அரிசி என நான்கும் கலந்திருக்கும். இவர்கள் கூடுதலாக மரவள்ளி திப்பியைச் சேர்க்கிறார்கள். கோழிகளுக்கு மட்டும் கருவாடு தூள் சேர்க்கிறோம். அதனால் சளித் தொல்லை ஏற்படாது, கெட்ட கொழுப்பும் உருவாகாது
  ஆறு வகையான தானியங்களைக் கலந்து ஆடு, மாடுகளுக்கான தீவனங்களைத் தயாரித்து வருகிறார்கள்.

  குதிரைவாலி, சாமை, தினை ஆகியவற்றின் தவுடுகளும் சேர்க்கப்படுகிறது. கெமிக்கல் சேர்ந்தால் தீவனம் வீணாகாது என்றாலும், இவர்கள் அவை எதையும் கலப்பதில்லை. மேலும் தீவனங்களை ஒரு கெட்டியான தன்மையில் கால்நடைகளுக்கு தரவேண்டும். இந்த மாதிரி தன்மையில் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்தால் தான் கால்நடைக்கு நல்லதாகும்.

  மேலும், இங்கு தயாரிக்கப்படும் கால்நடைத் தீவனம் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். குறிப்பாக கர்நாடகா, கேரளா பகுதியில் அதிக அளவில் இந்த தீவிரத்தை வாங்கி செல்கின்றனர் .

  மேலும் “மொத்த வியாபாரத்தைவிட சில்லறை வர்த்தகம் நன்றாக இருக்கிறது. மிகக் குறைவான லாபம் வைத்தே விற்கிறோம். மூட்டைக்குப் பத்து ரூபாய் கிடைத்தால்கூட போதும். ஒரு நாளைக்கு 500 மூட்டைகள் விற்க முடிகிறது. குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.

  மேலும் விவசாயத்திற்கு முக்கியமானது கால்நடைகள் ஆகும் அந்த கால்நடைகளுக்கு தரப்படும் உணவு மிகவும் சத்தானதாகவும் இயற்கை முறையில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் ஆகும் என தைரியமாக கூறுகிறார் பட்டதாரி பெண் சங்கீதா.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
  Published by:Arun
  First published:

  Tags: Villupuram

  அடுத்த செய்தி