முகப்பு /விழுப்புரம் /

விவசாய பணிகள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு களப்பயிற்சி அளித்த விழுப்புரம் விவசாயி!

விவசாய பணிகள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு களப்பயிற்சி அளித்த விழுப்புரம் விவசாயி!

X
விவசாய

விவசாய பணிகள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு களப்பயிற்சி

Villuppuram News : விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பாக விவசாய பணிகள் செய்வது பற்றி விரிவான களப்பயிற்சி  நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் பானாம்பட்டு சாலை அருகே பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பாக விவசாய பணிகள் செய்வது பற்றி விரிவான களப்பயிற்சி நடைபெற்றது. உலகில் பிறக்கிற ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறக்கும் வரை உணவு தேவை. விவசாயம் செய்வதால் தான் நம் ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கும். நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இடம் பெற வேண்டியது அவசியம். எனவே விவசாயம் குறித்தும், விவசாய பணிகளை அதிக எண்ணிக்கையினர் தெரிந்து வைத்துக்கொள்வது தேவையாகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு சாலை அருகே இயற்கை விவசாயி பாண்டியன் தலைமையில் ஒவ்வொரு மாதமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கீரை காய்கறிகள் வளர்ப்பது எப்படி? என்பது பற்றி இளைய தலைமுறையினருக்கு கள பயிற்சி நடைபெறும். இந்த மாதமும் பருப்பு கீரை, கொத்தமல்லி, புதினா, அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட 16 வகை கீரைகள் மற்றும் வெங்காயம், வெண்டை, கத்தரிக்காய், கொத்தவரை, கொடியவரை, செடிஅவரை, பீர்க்கன், பாகல், புடலை, முள்ளங்கி, சுரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, பூசணி, பரங்கிக்காய் போன்றவற்றை சாகுபடி செய்வதற்கான பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரையில் வருமானம் தரும் விவசாய வேலைகள், இயற்கை இடுபொருள் தயாரிப்பு போன்றவற்றிற்கான களப்பயிற்சிகள் இங்கு வழங்கப்பட்டது. வந்த அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பாத்தி அமைத்து, கத்தரிக்காய் செடிகளை நடவு செய்தனர். இந்த செய்முறை பயிற்சியில் கடலூர், வேலூர், பாண்டிச்சேரி, செங்கல்பட்டு, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயத்தில் சாதிக்க ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டு விவசாயத்தில் உள்ள பல நுணுக்கங்களை அறிந்து கொண்டனர்.

மேலும் இந்த களப்பயிற்சி குறித்து இதில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது, “இந்த களப்பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. விவசாயம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல அதில் எவ்வளவு நுட்பங்கள் நிறைந்துள்ளது என தெரிந்து கொண்டேன். நானும் நிச்சயமாக கீரை சாகுபடி செய்து அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இந்த களப்பயிற்சியின் மூலம் கிடைத்துள்ளது” என தன்னம்பிக்கையுடன் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அடுத்த மாதம் இதுபோன்ற களப்பயிற்சி நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள், முன்பதிவு செய்ய ,பாண்டியன், துல்லிய சுயசார்பு இயற்கை விவசாயம் பண்ணை பயிற்சியாளர் 9790327890 மற்றும் 7811897510 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, இந்த களப்பயிற்சி குறித்த பல தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் விவசாயி பாண்டியன் தெரிவித்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Villupuram