ஹோம் /விழுப்புரம் /

குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டி : மல்லர் கம்பத்தில் தங்கம் வென்ற விழுப்புரம் கல்லூரி மாணவர்..

குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டி : மல்லர் கம்பத்தில் தங்கம் வென்ற விழுப்புரம் கல்லூரி மாணவர்..

விழுப்புரம்

விழுப்புரம் - மல்லர் கம்பம்

Villupuram Mallar Kambam Gold Medallist | குஜராத்தில் நடைபெற்ற 36 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் ,விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன், மல்லர் கம்பம் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். சங்கீதா கயிறு மலர் கம்பத்தில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

குஜராத்தில் நடைபெற்ற 36வது தேசிய விளையாட்டு போட்டிகளில் மல்லர் கம்பம் போட்டியை முதன் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளனர். மல்லர் கம்பம் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன், இப்போட்டியில் கலந்துகொண்டார். கலந்துகொண்ட ஹேமச்சந்திரன் மல்லர் கம்பம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

அதேபோல் பெண்களுக்கான கயிறு மல்லர் கம்பத்தில் சங்கீதா வெண்கலப் பதக்கம் வென்று விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது. சுமார் 33 அணிகள் இதில் பங்கேற்றன. இதில் தமிழகமும் பங்கேற்றது. மொத்தம் 73 பதக்கங்களை தமிழகம் வென்றுள்ளது. இதில் 25 தங்கம், 21 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் அடங்கும். இதில் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பமும் இடம் பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் மற்றும் 6 வீராங்கனைகள் என மொத்தம் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

இதில் ஆடவர் தனிநபர் ஹேங்கிங் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன், 8.9 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதே பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரர் ஒருவரும் 8.9 ஸ்கோரை எடுத்திருந்தார்.

இருவருக்கும் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. ஹேமச்சந்திரன் இதற்கு முன் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி, கேலோ இந்தியா மற்றும் தேசிய மல்லர் கம்பம் போட்டியில் ஹேமச்சந்திரன் கலந்து பதக்கம் வென்றுள்ளார்.

'ஹேங்கிங்' தனிநபர் பிரிவில் கம்பத்தில் அந்தரத்தில் தொங்கியபடி ஏறி உடலை வில்லாக வளைத்து சாகசங்களை நிகழ்த்திய அவர் 8.90 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மல்லர் கம்பம் அறிமுக போட்டியிலேயே தங்கம் வென்றது மற்றவர்களிடம் ஆச்சரியத்தையும் பெருமையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

தங்கப்பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கூறியதாவது, "‘எனக்கு 19 வயது ஆகுது. நான் ஏழு வருடங்களாக விழுப்புரம் மாவட்டம் மல்லர் கம்பம் கழகம் மற்றும் டிரடிஷனல் ஸ்போட்ஸ் தமிழன்ஸ் நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். நாங்கள் நகராட்சி பூங்காவில் தான் பயிற்சி எடுக்கிறோம். நான் விழுப்புரம் அரசு கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு எக்கனாமிக்ஸ் படித்து வருகிறேன்.

நான் ஏற்கனவே தேசிய விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டில் கலந்து வெண்கலம், தங்கம் வென்று உள்ளேன். மல்லர் கம்பம் அறிமுக போட்டியிலேயே நான் தங்கம் வென்றது எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

மற்ற மாநிலங்களில் இதுபோன்ற விளையாட்டிற்கு அட்வான்ஸ் அளவில் உபகரணங்கள் தயார் செய்து கொடுக்கிறார்கள். எங்களிடம் போதிய இடவசதி மற்றும் உபகரணங்கள் இல்லாத போது நாங்கள் எங்களின் திறமையை வெளிக்காட்டி வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசாங்கம் இன்னும் நல்ல உபகரணங்கள் வழங்கினால் நிச்சயமாக மாநில அளவில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல மகளிருக்கான தனிநபர் ரோப் மல்லர்கம்பம் பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சங்கீதா மொத்தம் 9.05 ஸ்கோர் எடுத்து வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து சங்கீதா கூறியதாவது, "‘விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் ஏற்கனவே தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், கயிறு மல்லர் கம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று உள்ளேன்.

மேலும் படிக்க: தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

நான் விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் மற்றும் ட்ரெடிஷனல் ஸ்போர்ட்ஸ் தமிழன்ஸ் நிறுவனத்தில், 7 வருடங்களாக கயிறு மல்லர் கம்பம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

நான் குஜராத்தில் நடைபெற்ற 36 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கயிறு மல்லர் கம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று உள்ளேன். என்னைப் போன்ற மற்ற வீரர்களும் இந்த பாரம்பரிய மல்லர் கம்பம் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அரசாங்கத்திடம் எங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான். மற்ற மாநிலங்களில் இது போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதேபோல நமது அரசாங்கம் இதற்கு முக்கியத்துவம் அளித்து இந்த விளையாட்டிற்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தந்தால் நிச்சயமாக மேல் மேலும் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்போம் என சங்கீதா கூறியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram