ஹோம் /விழுப்புரம் /

கொட்டும் மழையிலும் உள்ளாட்சி தின கண்காட்சியை பார்வையிட்ட விழுப்புரம் கலெக்டர்.. 

கொட்டும் மழையிலும் உள்ளாட்சி தின கண்காட்சியை பார்வையிட்ட விழுப்புரம் கலெக்டர்.. 

விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர்

Villupuram Collector | விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன்

மழையிலும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு துறைகளின் வாயிலாக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஊரக வளர்ச்சி துறைகளின் மூலம் கிராமபுற மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தியும்,புனரமைத்திடவும் உத்திரவிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு,நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தினை நடத்திடவும்,அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்களின் பயன்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு முக்கிய இடத்தில் சிறப்பு கண்காட்சி நடத்திட தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தியதன் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்காட்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர்

இக்கண்காட்சியில் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,சுகாதார பணிகள், குடும்ப நல பணிகள்,வேளாண்துறை, தோட்டக் கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளி கல்வித்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை,மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை போன்ற துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அலுவலர்கள் பொதுமக்களுக்கு தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பொதுமக்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram