விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கொண்டு உணவு கோபுரம் அமைத்து ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா 2022 நிகழ்ச்சியயை மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.
ரத்தச்சோகை விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகளை பணியாளர்களுக்கு வழங்கி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டன. இந்த உறுதிமொழியின்போது அனைத்து பணியாளர்கள் முன்னிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டசத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய நான் இன்று உறுதிமொழி ஏற்பதாக கூறப்பட்டது. இத்திருவிழாவில், பழங்கள் காய்கறிகள் தானியங்கள் அடங்கிய உணவு கோபுரம் அமைத்து பொதுமக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள்,மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி கூறியதாவது :
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊட்டச்சத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1781 அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேசிய ஊட்டச்சத்து மாதத் திருவிழாவில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என அனைவரும் பயனடையலாம்.
இதையும் படிங்க: விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
இந்த இச்சத்து திருவிழாவில் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வுகள், கண்காட்சிகள் என பொதுமக்களுக்கு எளிய முறையை புரியும் வண்ணத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்களுக்கு ரத்த சோகை, இரும்புச் சத்து, ஊட்டச் சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த மாதத் திருவிழாவில் பயன் அடைவதற்கு பொதுமக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி பயனடையலாம் என அன்பழகி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram