முகப்பு /செய்தி /விழுப்புரம் / அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன தாய், மகன் உயிரிழப்பு - உறுதி செய்த சிபிசிஐடி!

அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன தாய், மகன் உயிரிழப்பு - உறுதி செய்த சிபிசிஐடி!

அன்பு ஜோதி ஆசிரமம்

அன்பு ஜோதி ஆசிரமம்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்டுக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட தாய், மகன் இறந்துவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதான லட்சுமி அம்மாள், அவரது 48 வயதான மகன் முத்து விநாயகம் ஆகியோர் காணாமல் போனதாக உறவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரும், அடுத்த ஒரு மாதத்தில் செங்கல்பட்டு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு தான் தாயும், மகனும் உயிரிழந்ததாக சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Also Read : வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஆனால், உயிரிழந்ததற்கான காரணம் குறித்துக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து 53 பேர் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அவர்களில் 15 பேர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: Crime News, Villupuram