ஹோம் /விழுப்புரம் /

அம்பேத்கரின் நினைவு நாள்.. விழுப்புரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்!

அம்பேத்கரின் நினைவு நாள்.. விழுப்புரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்!

Ministers garlanded Ambedkar statue

Ministers garlanded Ambedkar statue

அம்பேத்கர் நினைவை போற்றவேண்டும் என்றும் திராவிட கழகம் எப்போதும் அவருக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறது - அமைச்சர் பொன்முடி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

அம்பேத்கரின் 66வது நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அம்பேத்கரின் சிலைக்கு திமுக சார்பில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அம்போத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதே போன்று அதிமுக,திமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினை சார்ந்தவரக்ள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து அடித்தட்டு மக்கள் முன்னேற சட்டம் வகுத்து கொடுத்த அம்பேத்கர் நினைவை போற்றும் வகையில் திராவிட கழகம் என்றும் அவருக்கு மரியாதை கொடுத்து கொண்டு இருப்பதாகவும் தந்தை பெரியார் தெற்கு பதியில் எப்படி கோலோச்சினாரோ அது போன்று இந்தியா முழுவதும் அம்பேத்கர் கோலோச்சிய நிலையில் மகாராஷ்டிராவில் அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க போராடியபோது அப்போதைய மகாராஷ்டிர அரசு மறுத்த காலத்திலேயே தமிழகத்தில் அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் தான் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.

அம்பேத்கர் நினைவை போற்றவேண்டும் என்றும் திராவிட கழகம் எப்போதும் அவருக்கு மரியாதை செய்து கொண்டிருப்பதாகவும் அதே உணர்வோடு தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்திருப்பதாக கூறினார்.

அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாட வேண்டும், அவரின் வரலாற்றை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று தான் சட்டமன்றத்தில் அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பதாகவும் அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட அம்பேத்கர் வரலாற்றையும், இந்திய நாட்டின் அரசியலமைப்பு, சமூகநீதி வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Ambedkar, Dr. B.R.Ambedkar, Local News, Ministers, Viluppuram S22p13