விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். ஐந்து முறை செஞ்சி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஸ்தானுக்கு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.
மஸ்தான் அமைச்சரானதும் செஞ்சி பேரூராட்சி தலைவராக அவருடைய மகன் மொக்தியார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கட்சி ரீதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் உள்ளார். அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.
அமைச்சர் மஸ்தானின் தம்பி காஜா நஜீர் கடந்த 15 ஆண்டுகளாக செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இன்று அவரை பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். செஞ்சியின் புதிய நகர செயலாளராக செஞ்சி பேரூராட்சி ஐந்தாவது வார்டு உறுப்பினர் கார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் திண்டிவனம் நகராட்சி 20வது திமுக நகர மன்ற உறுப்பினராக உள்ள ரம்யாவின் கணவர் மருவூர் ராஜா சாராய வியாபாரியான இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் மஸ்தானுடன் மருவூர் ராஜா இருக்கும் புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வெளியாகியது. இந்நிலையில் அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
மேலும் படிக்க... அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்... வெளியானது புது அப்டேட்..!
இந்நிலையில் தான் அமைச்சர் மஸ்தானின் தம்பியான காஜா நஜீர் நகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சிப் பதவிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister, Villupuram