சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மாண்டஸ் புயலின் தாக்கம் குறித்து பார்வையிட்டு இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன், பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்கள் அமைத்து தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுத்திட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொண்டதன் அடிப்படையில் மாண்டஸ் புயலினால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
ஓரிரு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
மேலும் பலத்த காற்றினால் தடை செய்யப்பட்ட மின்சாரமும் தற்பொழுது முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் பால் பவுடர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைத்து பாதுகாக்கப்பட்டனர்.
மேலும், தற்போது குளிர்காலம் என்பதால் அவர்களுக்கு தேவையான பாய், போர்வை, தலையனை மற்றும் உடைகள் போன்றவை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram