முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் மினி மாரத்தான் போட்டி.. அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்..

விழுப்புரத்தில் மினி மாரத்தான் போட்டி.. அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்..

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் மினி மாரத்தான் போட்டி

Villuppuram Mini Marathon : விழுப்புரத்தில் மினி மாரத்தான் போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

  • Last Updated :
  • Viluppuram, India

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி 4 முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, ஆசியர் அலுவலக பின்பக்க சாலை கடந்து பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் திருநங்கைகள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவருக்கும் தனி தனி குழுவாக பிரிந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

விழுப்புரத்தில் மினி மாரத்தான் போட்டி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மாரத்தான் போட்டியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவிகள். திருநங்கைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram