முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் புத்தகக்காட்சியில் சிறப்பு போட்டிகள் : பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்!

விழுப்புரம் புத்தகக்காட்சியில் சிறப்பு போட்டிகள் : பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்!

X
புத்தக்காட்சியில்

புத்தக்காட்சியில் பாடி அசத்திய மாணவி

Villupuram News| விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் சிறப்பு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் புத்தக புத்தக திருவிழாவில் மாணவர்கள் நடன நிகழ்ச்சி, மெளன நாடகம் என களைகட்டுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நகராட்சி திடலில் 12 நாட்கள் நடைபெறுகிறது. புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக நடன நிகழ்ச்சி, மௌன நாடகம் என வளாகமே களைகட்டியது.

புத்தகத் திருவிழா ஒவ்வொரு நாளும் புதுப்புது தலைப்பின் கீழ் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளர் பங்கேற்று பொதுமக்களிடம் புத்தகம் வாசித்தலின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கின்றனர்.

மாணவி ஹர்ஷினி நேத்ரா

புத்தகத்திருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட்டு போட்டி, நடன போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி போன்ற சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த திருவிழாவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அந்த வகையில் "கண்டா வர சொல்லுங்க'  என்ற கர்ணன் பட பாடலை  தனியார் பள்ளி மாணவி ஹர்ஷினி நேத்ரா பாடியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து புத்தகத் திருவிழாவை கண்டுகளித்து வருகின்றனர். இந்த புத்தகத் திருவிழா அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Local News, Viluppuram S22p13