விழுப்புரம் அடுத்துள்ள மேல்பாதி கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதர்மராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோயிலில் பாரம்பரியம் மிகுந்த தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா நடைபெறும்.
60 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தர்மராஜாவிற்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. தர்ம ராஜாவிற்கு மீண்டும் பட்டாபிஷேகமும், வீதியுலாவும் நடைபெற உள்ளது. கிராமப்பகுதி முழுவதும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதாலும், தர்மரை வரவேற்கும் விதமாகவும் கிராமம் முழுவதும் பச்சை தென்னங்கீற்றாலான பந்தல் அமைக்கும் பணிகளில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் - களைகட்டும் மேல்பாதி
தர்மர் வெளியே வரும் போது குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவரக்ளுக்கு, தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கடவுளை நினைத்து வணங்கினால் நிச்சயம் நினைத்தது நிறைவேறும் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர் இக்கிராம மக்கள் .

ஸ்ரீதர்மராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில்
மேலும் தர்மர் வெளியே வரும்போது கிராமம் முழுவதும் பச்சைபசேல் என்று காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட வேண்டும் என்பது கிராம மக்களின் ஐதீகமாக உள்ளது.

தென்னங்கீற்று பந்தல்
இத்திருவிழாவினை பார்க்க சுற்றிலும் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வருவார்கள் .
மேலும் இந்த திருவிழாவை பார்க்க ஆவலுடன் மக்கள் தயாராகி வருகின்றனர்.

அமைக்கப்பட வேண்டும் என்பது கிராம மக்களின் ஐதீகமாக உள்ளது.
தர்மராஜா பட்டாபிஷேகத்திற்கு முதல் நாளான ஆகஸ்ட் 1 ம் தேதி காலை அக்னி பூஜை, கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதினா, கும்ப பூஜை, காப்பு கட்டுதல் நடைபெறுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன் பிறகு மறுநாள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அலங்கரிக்கப்பட்ட தர்மர் யானை, குதிரை மீது அமர்ந்த நிலையில், கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்கால் குதிரை, செண்டை மேளம், உருமி மேளம் முழங்க மிக விமரிசையாக வீதியுலா சிறப்பாக நடைபெற உள்ளது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தர்மராஜா திருவிழாவில் மேல்பாதி கிராம மக்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

மேல்பாதி தர்மராஜா கோவிலுக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.