Home /viluppuram /

விழுப்புரத்தில் வரும் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

விழுப்புரத்தில் வரும் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி 33-வது கொரோனா தடுப்புசி முகாம் நடைபெறவுள்ளது.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் 33வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பேசும்போது, ‘33-வது கொரோனா தடுப்பூசி முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 7தேதி நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாமானது 2,033 இடங்களில் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

    இம்முகாமில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் கடந்த மருத்துவமனைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை பூஸ்டர் டோஸ் தேவைப்படுவோர் இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் 45 வயதிற்கு மேற்பட்டோரில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்க்கு உள்ளானவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

    தடுப்பூசி செலுத்திக்கொள்வது தீவிர நோய்த்தொற்று மற்றும் இறப்பிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுவதோடு பிறருக்கு நோய் தொற்று பரவும் தன்மையை குறைக்க உதவும். மேலும் நம்மை சுற்றியுள்ளவர்களையும், எளிதில் நோய்த்தொற்று ஏற்படக் கூடியவர்களையும் பாதுகாக்க உதவும்.

    கொரோனா உயிரிழப்பை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்’ என்றார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி