முகப்பு /விழுப்புரம் /

அம்மன், குறத்தி வேடமிட்ட பக்தர்கள்.. விழுப்புரம் கண்டாச்சிபுரத்தில் விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை!

அம்மன், குறத்தி வேடமிட்ட பக்தர்கள்.. விழுப்புரம் கண்டாச்சிபுரத்தில் விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை!

X
அம்மன்,

அம்மன், குறத்தி வேடமிட்ட பக்தர்கள்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே 6 தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி அளிக்கும், ஸ்ரீ மகா காளியம்மன் மயான கொள்ளை 4ம் ஆண்டாக வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீமஹாகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் மயான கொள்ளை திருவிழாவை காண அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அம்மன் மற்றும் குறத்தி வேடமிட்டு வீதிகளில் வலம் வந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும், விளக்கு பூஜைக்காக வேண்டுதலுடன் களிமண்ணை எடுத்து வந்து அதில் சிவன், பார்வதி உருவம் பதித்து விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. மேலும், அம்மனுக்கு பிறந்த வீட்டார் சீராக பூ, பொட்டு, சேலை,வளையல் உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். காளிக்கு அபிஷேக,பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது.

சில்லறை நாணயங்கள் சூறை :

இந்த நிகழ்வின் இறுதியாக, வான்நோக்கி வீசும் பொருட்களை மடியேந்தி பெற்றுக்கொண்டால் குழந்தையின்மை உள்ளிட்ட கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்கிற ஐதீகத்தின் படி, அம்மனுக்கு உகந்த பொருட்களான வேர்கடலை, வாழைப்பழம், சில்லறை நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வான்நோக்கி சூறையிட்டும், சூரையிட்ட பொருட்களை அந்த காளியே நமக்கு மேலிருந்து தருவதாக எண்ணி மடியேந்தி பெற்றுக் கொண்டனர் பக்தர்கள். இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் அம்மனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மயான கொள்ளை :

இதனைத்தொடர்ந்து, சிறப்பு கலைநிகழ்ச்சிகளுடன் மயான கொள்ளை நடைபெற்றது. இந்த மயான கொள்ளை உற்சவ திருவிழாவின்போது ஒரே இடத்தில் உள்ள 6 தெய்வங்களான ஸ்ரீமகா காளியம்மன், ஸ்ரீவன காளியம்மன், ஸ்ரீஅக்னி வீரன், ஸ்ரீஆத்திலியம்மன், ஸ்ரீசப்த கன்னிகள், ஸ்ரீமுனீஸ்வரன் ஆகிய 6 தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி தந்து மக்களுக்கு அருள்பாலித்தனர். இந்த மயான கொள்ளை விழாவில், கண்டாச்சிபுரம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Villupuram