முகப்பு /செய்தி /விழுப்புரம் / அமெரிக்க பெண்ணுக்கு மசாஜ் செய்யும் போது பாலியல் சீண்டல்.. விழுப்புரம் இளைஞர் கைது!

அமெரிக்க பெண்ணுக்கு மசாஜ் செய்யும் போது பாலியல் சீண்டல்.. விழுப்புரம் இளைஞர் கைது!

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மசாஜ் சென்டரில் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியுடன் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஆரோவில்லை சுற்றி பார்க்க வந்துள்ளார். பின்னர்  மசாஜ் செய்வதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரெக்கீஸ் என்பவர் அமெரிக்க இளம்பெண்ணுக்கு மசாஜ் செய்துள்ளார். அப்போது அவர் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கீஸை கைது செய்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கீங்களா? - செம அறிவிப்பு வந்திருக்கு!

செய்தியாளர் : ஆ.குணாநிதி - விழுப்புரம்

top videos
    First published:

    Tags: Crime News, Local News, Villupuram