முகப்பு /விழுப்புரம் /

ஏக்கருக்கு ₹1,00,000 வருமானம்.. நஷ்டமே தராத சாமந்தி பூ சாகுபடி - வழிகாட்டும் விழுப்புரம் விவசாயி 

ஏக்கருக்கு ₹1,00,000 வருமானம்.. நஷ்டமே தராத சாமந்தி பூ சாகுபடி - வழிகாட்டும் விழுப்புரம் விவசாயி 

X
விழுப்புரம்

விழுப்புரம் - சாமந்தி பூ சாகுபடி

Villupuram Agriculture News | சாமந்தி பூ சாகுபடி குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்த விழுப்புரம் அடுத்த மயிலம் அகூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை, சாமந்தி பூ பயிரிடும் முறை குறித்தும் விரிவாக விளக்கினார்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர். சாமந்தி பயிரிட்டால் லாபம் தானே தவிர நஷ்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.

அகூர் கிராமம் ஒரு அழகான அமைதியான விவசாய பூமி. இந்த பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் சாமந்திப் பூக்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விவசாயி ஏழுமலை (72) பாரம்பரியமாகவே நெல், மணிலா, கடலை, போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்தார்.  இந்த நிலையில் தனது மகன் மாயகிருஷ்ணன் (34) ஆலோசனையை ஏற்று கடந்த 3 வருடங்களாக சாமந்தி பூவை சாகுபடி செய்து, லாபம் ஈட்டுவதாக தெரிவித்தார்.

சாமந்தி பூ சாகுபடி குறித்த  நமதுசந்தேகங்களுக்கு பதிலளித்த விவசாயி ஏழுமலை, சாமந்தி பூ பயிரிடும் முறை குறித்தும் விரிவாக விளக்கினார்.

ஏக்கருக்கு 10,000 செடிகள் நடவு:

”3 ஏக்கர் நிலப்பரப்பில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான சாமந்தி பூவை பயிரிட்டுள்ளேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 கிலோவுக்கு மேல் பூக்களை சாகுபடி செய்கிறோம். 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நிலத்தை தயார் செய்து செடிகள் முதலில் நடவு செய்தேன். ஏக்கருக்கு குறைந்த பட்சம் 10,000 செடிகள் தேவைப்படுகிறது. அனைத்து செடிகளும் 15 நாட்கள் வரை வளர்ந்த செடிகளாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : வேண்டியோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி தரும் தஞ்சை நீலமேக பெருமாள் கோயில் சிறப்புகள்!

செடிகள் நட்ட பிறகு 45 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். நாங்கள் அறுவடை செய்யும் பூக்களை திண்டிவனம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். விசேஷ காலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு கூட போகும். மற்ற நாட்களில் கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு எடுப்பார்கள்.

சாமந்தி பூ சாகுபடி முறைகள்

தோட்டக்கலைத்துறையின் மானியம்:

தோட்டக்கலை துறையின் மூலம் சாமந்திப்பூ சாகுபடிக்கு இரண்டரை ஏக்கருக்கு 16,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 8,000 ரூபாய் செடிகளாகவும் மீதி 8000 ரூபாய்க்கு இடுபொருட்களையும் வழங்குகிறது தோட்டக்கலைத்துறை.

மேலும் சாமந்தி செடிகளில் ஏதேனும் பூச்சி தாக்குதல் இருந்தால் தோட்டக்கலை துறை அதிகாரிகள் வயல் நிலத்திற்கே வருகை புரிந்து பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்து, என்ன வகை பூச்சி தாக்குதலுக்கு என்ன மாதிரியான மருந்து தெளிக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.

சாமந்தி பூ சாகுபடி முறைகள்

பூச்சி தாக்குதல் தடுப்புமுறை:

என் அனுபவத்தில் பூச்சி தாக்குதல் சாமந்திப்பூ செடிகளில் தென்பட்டால் வேப்ப எண்ணெய் தெளித்தாலே போதும், பூச்சிகள் வராமல் தடுக்க முடியும்.

மேலும் படிக்க :   இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

மேலும் சாமந்தி சாகுபடியில் சொட்டு நீர் பாசன வசதி மேற்கொண்டால் கூலி ஆட்கள் வேலையை குறைக்க முடியும். நேரமும் மிச்சமாகும். நல்ல மகசூல் நல்ல பராமரிப்பு இருந்தால் நிச்சயமாக சாமந்தி பூ சாகுபடியில் ஒரு ஏக்கரில் இருந்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.

சாமந்தி பூ சாகுபடி முறைகள்

மழைக்காலத்தில் மட்டும் தான் சாமந்திப் பூவில் வருவாய் ஏதும் இருக்காது. முகூர்த்த நாட்களில் சாமந்தி சாகுபடியில் நல்ல லாபம் பார்க்கலாம்”. என தெரிவித்தார் விவசாயி ஏழுமலை.

சில நுணுக்கங்கள்:

சாமந்தி செடிகளை பொதுவாக களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனிக்கிளையினை ஒடித்து விட வேண்டும். அப்போது தான் பக்கக் கிளைகள் நன்றாக வளரும். நவம்பர் மாதத்தில் பூத்து ஓய்ந்துவிடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில், செடிகளைத் தரைமட்டத்திலிருந்து வெட்டி விட்டு, களை எடுத்து, உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நல்ல பராமரிப்புடன் சாமந்தி செடிகளை பார்த்துக் கொண்டால், நல்ல மகசூல் ஈட்ட முடியும் என தங்கள் அனுபவங்களை மேலும் பகிர்ந்தனர் மற்ற விவசாயிகள்.மாற்று விவசாயத்தில் இறங்கினால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும் என்பது சாமந்தி சாகுபடியில் இறங்கி கலக்கி வரும் இந்த விவசாயிகள் ஒரு எடுத்துக்காட்டு.

First published:

Tags: Local News, Villupuram