Home /viluppuram /

திருநங்கைகள் சேர்ந்து கட்டிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!

திருநங்கைகள் சேர்ந்து கட்டிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!

Mariamman

Mariamman Temple Kumbabhishekam built by transgender people

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம்  அய்யன்கோவில்பட்டு அரவாணிகள் நகரில், விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் அனைவரும் ஒன்றுகூடி, அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்  ஆலய நூதனஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் அய்யன்கோவில்பட்டு அரவாணிகள் நகரில், விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் அனைவரும் ஒன்றுகூடி, அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய நூதனஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    விழுப்புரம் அடுத்து அய்யன் கோவில் பட்டு அரவாணி நகரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனுக்கு ஆலயம் அமைத்தும், ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மகாலட்சுமி, துர்க்கை கடவுளை அமைத்து மகா கும்பாபிஷேகம்  மிக விமரிசையாக நடைபெற்றது.

    விழுப்புரம் திருநங்கைகள் சங்கம் தலைவி சின்னவீடு, ராதாம்மாள், நாயக் தலைமையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகி ஆன விமலா அம்மாள், ராதாம்மாள் பரிவார், சேலாக்கள், நாத்திகள், மற்றும் மலேசியா சேலாக்கள், நாத்திகள் தலைமை தாங்கினர்.

    மேலும் காலை 7 மணி முதல் காலை யாக பூஜைகள், மேலும் மகா தீபாராதனை காட்டப்பட்டு கோயிலின் கோபுரத்திற்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.மேலும் விழுப்புரம் சுற்றியுள்ள பல திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் இந்த கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் கலந்துகொண்டனர்.

    இந்த கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


    மேலும் இந்த கோயில் குறித்து விழுப்பம் திருநங்கைகளை சங்கத்தின் தலைவி விமலா கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு எனக்கு கோயில் எதுவும் கட்டப்படவில்லை, ஆகையினால் திருநங்கைகள் அனைவரும் நாங்கள் ஒன்று கூடி எங்களுக்கென ஒரு கோயில் கட்டி முடித்துள்ளோம்.இதற்கு எங்களுக்கு உதவியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உதவி புரிந்தார்.

    ஒவ்வொரு திருநங்கைகளும் அவர்களால் முடிந்த பண உதவி செய்து இக்கோயிலை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளோம். இக்கோயில் அனைத்து திருநங்கைகளுக்கும் பொதுவானது எனவே அனைவரும் இக்கோயிலுக்கு வருகை புரியலாம் என கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Ramprasath H
    First published:

    அடுத்த செய்தி