ஹோம் /விழுப்புரம் /

சிதிலமடைந்த கட்டிடத்தில் செயல்படும் அரசு பள்ளியால் மாணவர்கள் அச்சம்.. விழுப்புரத்தில் அவலம்.. பள்ளிக்கல்வித்துறை கவனிக்குமா?

சிதிலமடைந்த கட்டிடத்தில் செயல்படும் அரசு பள்ளியால் மாணவர்கள் அச்சம்.. விழுப்புரத்தில் அவலம்.. பள்ளிக்கல்வித்துறை கவனிக்குமா?

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் அருகே சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்கும் அரசு பள்ளியால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் மேற்கூரையில் கசியும் மழைநீரால், மழைக்காலங்களில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது தாழங்காடு கிராமம். இப்பகுதியை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களாக தான் உள்ளனர். இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் பிள்ளைகளை அருகில் உள்ள தாழங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்ப்பது வழக்கம்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தாழங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தற்பொழுது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பள்ளியில் தற்போது மொத்தம் 43 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும் படிக்க :  செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் பெய்த மழையின் காரணமாக, பள்ளியின் ஓடுகள் மற்றும் சுவர்கள் பெயர்ந்து மழை நீர் வகுப்பறைகளில் கசிய ஆரம்பித்துள்ளது.

தாழங்காடு தொடக்க பள்ளி, விழுப்புரம் மாவட்டம்

பள்ளி கட்டிடம் பழையது என்பதாலும், சிதிலமடைந்த நிலையில் உள்ளதாலும் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி வலுத்துள்ளது. மேலும் இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற சூழலும் உள்ளது.

மேலும் படிக்க :  வீட்டிலிருந்தபடி ₹15,000 வருமானம்.. 140 வகையான சிறுதானிய கேக், பிஸ்கட் தயாரிப்பில் அசத்தும் தேனி பெண்..

இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் மரக்காணத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் போன்றோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால்  இதுவரையில் எந்தவொரு பலனும் இல்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய ஊர் மக்கள் “எங்க பசங்க எல்லாம் இந்த பள்ளியில் தான் படிக்கிறாங்க, ஆனா இந்த கட்டிடம் ரொம்ப பழசா ஆயிடுச்சு. எங்களால வேற எங்கயும் சேக்கவும் முடியாது. பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் நடக்காம இருக்கனும்னா உடனடியா புதிய கட்டிடம் கட்டித் தரனும். எங்க பசங்க, ஆசிரியர் உயிர், எல்லாத்தையும் விட பெருசு. அரசும், அதிகாரிகளும் பள்ளிக்கல்விதுறையும் இதுல உடனடியா நடவடிக்கை எடுக்கனும்” என்று வேதனையுடம் கோரிக்கை வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெற்றோர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்குமா பள்ளிக்கல்வித்துறை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram