முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி..

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி..

X
விழுப்புரம்

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி

Villuppuram News | தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான ‘மாபெரும் தமிழ்க் கனவு”எனும் அறிவுசார் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில், பாடலாசிரியர் அறிவுமதி மற்றும் பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான ‘மாபெரும் தமிழ்க் கனவு”எனும் அறிவுசார் திட்டம் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. தேடல் மிக்க மாணவர்கள் பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும். தமிழின் பெருமிதத்தை, தமிழரின் வாழ்வியலை, பண்பாட்டுக் கூறுகளை மரபுசார்ந்த தொழில்நுட்ப அறிவுத் திறனை, அற வாழ்வியலை, இலக்கிய சுரங்கத்தை வளர்ந்து வரும் இளையோர்க்கு கொண்டு சேர்த்து அவர்களை விழிப்படைய செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

50 மாணவர்கள் எனும் அடிப்படையில் தமிழில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பல்துறை மாணவர்களை தேர்வு செய்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துள்ளார்கள் ஆசிரியர்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் அமைந்த ‘பெரிதினும் பெரிது கேள்” என்னும் ஆழ்ந்த பொருள் நிறைந்த தலைப்பிலும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி எனும் சிறப்பு பெற்ற உயர் தமிழரின் பழமைக்கூறுகளை விவரிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்கள் பேசவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியினை முன்னிட்டு, அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி அரங்கு, தொல்பொருள் படிமங்கள் கண்காட்சி அரங்கு, மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தமிழ் பாரம்பரியம் பற்றிய தொல்பொருள் கண்காட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி, குழந்தை திருமணம் போன்ற அனைத்து வகையான கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

First published:

Tags: Local News, Villupuram