விழுப்புரம் மாவட்டத்தில், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், அமைச்சர் 2022-2023 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். அதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வனாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP) கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் மஞ்சப்பை விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூபாய் 10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடையவளாகங்கள் சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாசு மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள்,வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கௌரவிக்க முன் வந்துள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய (tnpch.gov.in) இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பாக, விண்ணப்பபடிவத்தில் தனிநபர்/நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிடவேண்டும்.
கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD)) பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 01.05.2023 ஆகும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Plastic Ban, Plastics, Viluppuram S22p13