Home /viluppuram /

ஆடிமாத திருவிழாக்களால் தென்மங்கலத்தில் களைகட்டும் மண்குதிரை விற்பனை..

ஆடிமாத திருவிழாக்களால் தென்மங்கலத்தில் களைகட்டும் மண்குதிரை விற்பனை..

மண்

மண் குதிரைகள்..

Villupuram Latest News : விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே தென்மங்கலம் கிராமத்தில், பூர்வீகமாக மண் சிலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் சிவமணி குடும்பத்தினர். 

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே தென்மங்கலம் கிராமத்தில், பூர்வீகமாக மண் குதிரைகள் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல ஆடி மாத திருவிழா காலங்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வதனால் மண் குதிரைகள் அதிக அளவில் விசேஷமாக விற்பனையாகி வருகிறது.

ஆடி மாதம் என்றாலே விசேஷங்களுக்கு பஞ்சமில்லை.. ஊர் விழாக்கள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நேர்திக்கடன் என பல்வேறு விசேஷங்கள் நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.

ஆடிமாதத்தில் அய்யனார், கருப்பசாமி மற்றும் பல்வேறு  கடவுள்களுக்கு பக்தர்கள் மண் குதிரைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மண் குதிரைகள்..


விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே தென்மங்கலம் கிராமத்தில், பூர்வீகமாக மண் சிலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் சிவமணி குடும்பத்தினர். தென்மங்கலம் கிராமத்திலேயே இந்த குடும்பம் தான் மண்ணால் செய்யப்படும் சிலைகள் (குதிரைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்து வருகின்றனர்.

ஆடிமாதத்தில்  நேர்த்திக்கடனாக செலுத்துவதற்கு மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை அதிகளவில் வாங்கி செல்வதாக கூறுகின்றனர்.

மண் குதிரைகள்..


இது குறித்து சிலைகளை செய்யும் சிவமணி கூறியதாவது,

“நான் பரம்பரை பரம்பரையாக இந்த தொழில் தான் செய்து வருகிறேன். ஆடி மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் பண்டிகைகள் என களைகட்டும்.   இத்திருவிழாக்களில்  குதிரைகள் நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மண் குதிரைகள்..


விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து  குதிரைகளை செய்வதற்கு ஆர்டர்கள் வந்துள்ளன. ஒரு ஜோடி மண் குதிரைகள் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பயபக்தியுடன் கடவுளுக்கு சேவை செய்யும் மன திருப்தியுடன் இந்த குதிரைகளை செய்து பக்தர்களுக்கு தருகிறோம். குதிரை செய்யும் வேலைகள் ஆடிமாதத்தில் அமோகமாக நடைபெற்று வருகிறது என சிவமணி கூறினார்.

மண் குதிரைகள் விற்பனை தொடர்பான சந்தேகங்களுக்கு 88839 28221 என்ற எண்ணில் சிவமணி-ஐ தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி