விழுப்புரம் மாவட்டம் மல்லர் கம்ப கழகம் சார்பாக அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 22 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி விழுப்புரம் மாவட்டம் மல்லர் கம்பம் கழகம் சார்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி வாகை சூடிய விளையாட்டு வீரர்களும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவர்களும், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

மல்லர்கம்பம் போட்டியில் வீரர்
இந்த மாநில அளவு மல்லர் கம்ப போட்டியின் நோக்கம் என்னவென்றால், மாணவர்கள் அடுத்தகட்ட அளவில், முன்னேற்றுவதற்கும், உலக அளவில் மல்லர் கம்பம் போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்வதற்காகவும் இந்தப் போட்டி நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் மல்லர் கம்பம் போட்டிக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மாநில அளவில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

மல்லர்கம்பம் போட்டியில் வீரர்
இந்த போட்டி குறித்து தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தின் தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது, ‘மாநில அழைப்பு மல்லர் கம்பம் போட்டி மிகவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று மிக சிறப்பாக அவர்களின் திறமையை காண்பித்து வருகின்றனர்.

மல்லர்கம்பம் போட்டியில் வீரர்கள்
மல்லர் கம்பத்தின் முக்கியத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்வதும், வீரர்களை அடுத்தடுத்த அளவில் முன்னேற்றிக் கொண்டு செல்வதற்காக அடித்தளமாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல், சிலம்பம் போட்டிக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அரசாங்கம் அளித்து ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. அதேபோல் மல்லர் கம்பம் போட்டிக்கும் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்து மல்லர் கம்பம் விளையாட்டுக்கு ஒரு அங்கீகாரம் தரவேண்டும். இட ஒதுக்கீடு கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு ஒரு வழியாக அமையும் என விளையாட்டுத் துறை சார்பாக அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அயல்நாட்டு விளையாட்டுக்கு வரவேற்பு அளித்த பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் பாரம்பரிய விளையாட்டிற்கும் ஆதரவு அழைக்க வேண்டுமென கூறினார்.
மேலும் இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கூறியதாவது, இப்போட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் தேசிய அளவில் முன்னேறுவதற்கு இந்த போட்டி ஒரு ஊன்றுகோலாக அமைந்துள்ளது என வீரர்கள் தன்னம்பிக்கையுடன் கூறினர்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.